புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திற்குட்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் சிறப்பு இயக்கம் 4.0

Posted On: 18 OCT 2024 1:13PM by PIB Chennai

தூய்மையை அமைப்பு ரீதியானதாக  மாற்றவும், நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு சிறப்பு இயக்கம் 4.0-வை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திற்குட்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் / கல்வி நிறுவனங்கள் 2024 அக்டோபர் 2-ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையின் போது, பொதுமக்களின் கோரிக்கைகள், கோரிக்கை மீதான மேல்முறையீடுகள், மாநில அரசுகளின் பரிந்துரைகள் உள்ளிட்டவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.  இதில்  நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 75%க்கும் அதிகமான கோப்புகள் மீது, இயக்கத்தின் பாதி காலத்திற்குள்ளாகவே தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு இயக்கம் முடிவடைய உள்ள இம்மாதம் 31-ம் தேதிக்கு முன்பாகவே, 100% இலக்கை எட்டும் வகையில்,  நிலுவையில் உள்ள கோப்புகளுக்குத் தீர்வு காணப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2066008

------ 

MM/KPG/KR


(Release ID: 2066033) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi