கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் பணி முன்னேற்றம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2024 12:16PM by PIB Chennai

அரசு துறைகளில் தூய்மை பணியை மேற்கொள்ளவும்,  நிலுவையில் உள்ள பணிகளுக்கு தீர்வு காணவும், கனரக தொழில்கள் அமைச்சகம், அதன் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளுடன்  இணைந்து 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறும் சிறப்பு இயக்கம் 4.0-ன் தற்போதைய முக்கிய கட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

இந்த இயக்கத்தின் போது 8.8 லட்சம் சதுர அடி பரப்பளவு ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவில் 34 சதவீதத்திற்கும் மேலானதாகும். 15,000 நேரடி கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 4,700 நேரடி கோப்புகள் கழிக்கப்பட்டுள்ளன. 2,900-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், கழிக்கப்பட்ட பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.1.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065675

***

IR/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2065873) வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी