அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பருவநிலை செயல்திட்டத்தின் முக்கிய பகுதிகளாக கூட்டு ஒத்துழைப்பும் புதுமை நடைமுறைகளும் அமைய வேண்டும்: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
16 OCT 2024 6:46PM by PIB Chennai
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட தீர்க்கமான நடவடிக்கை அவசர தேவை உள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற டைம்ஸ் நவ் குளோபல் சஸ்டெய்னபிலிட்டி அலையன்ஸ் அமைப்பின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் உச்சி மாநாடு 2024-ன் 6-வது பதிப்பில் அவர் உரையாற்றினார்.
நீடித்த வளர்ச்சியை உலகளாவிய பருவநிலை மாற்றத் தடுப்பு முயற்சிகளுடன் சமநிலைப்படுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார். பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளுக்கு ஏற்ப, புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழே கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அறிவியல் அடிப்படையிலான இலக்குகளின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.
இந்தியாவின் முக்கிய பருவநிலை இலக்குகளை அவர் சுட்டிக் காட்டினார்.
*2030 ஆம் ஆண்டுக்குள் பசுமைக் குடில் வாயு உமிழ்வு தீவிரத்தில் 33-35% குறைப்பு,
*புதைபடிவம் அல்லாத எரிபொருள் எரிசக்தித் திறனை 500 ஜிகாவாட்டாக உயர்த்துவதற்கான உறுதிப்பாடு,
*2070 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய ஒரு லட்சிய இலக்கு,
ஆகிய இந்த இலக்குகளை அடைவதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர், அரசு, தொழில்துறை, கல்வியாளர்கள், சிவில் சமூகம் ஆகியவற்றுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பை வலியுறுத்தினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீடித்த நிலையான விவசாயம், பசுமை தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் மூலம் இந்தியா புத்தாக்கத்தின் மையமாக இருக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஆராய்ச்சி - மேம்பாட்டை மேம்படுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு நபரும் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ளும் எளிய, சிறிய மாற்றங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறிப்பிட்டார்.
**
PLM/DL
(Release ID: 2065593)
Visitor Counter : 46