சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், கொலம்பிய துணை அமைச்சர் திரு ஜார்ஜ் என்ரிக் ரோஜாஸ் ரோட்ரிக்ஸுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்

Posted On: 16 OCT 2024 6:03PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், கொலம்பியா வெளியுறவுத் துறை துணை அமைச்சர் திரு ஜார்ஜ் என்ரிக் ரோஜாஸ் ரோட்ரிக்ஸ் உடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பருநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு போன்ற முக்கிய உலகளாவிய விஷயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

கொலம்பியாவின் காலி நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் பெருக்க மாநாட்டிற்கு மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் வாழ்த்து தெரிவித்தார். சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனையான, அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த இயக்கத்திற்குக் கொலம்பியத் துணை அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் துறையில் இந்தியா - கொலம்பியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டம் நடைபெற்றது.

 

** 

PLM/DL


(Release ID: 2065590) Visitor Counter : 38


Read this release in: English , Urdu , Hindi