ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஊரக வளர்ச்சித் துறை தூய்மை இயக்கம் 4.0 பணிகள்
Posted On:
16 OCT 2024 5:54PM by PIB Chennai
நிருவாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி, ஊரக வளர்ச்சித் துறை தனது அலுவலகங்களில் நிலுவையிலுள்ள குறைகளுக்குத் தீர்வு காணவும், அலுவலகங்களில் தூய்மையை ஏற்படுத்தவும் சிறப்பு இயக்கம் 4.0 ஐ செயல்படுத்தி வருகிறது.ஊரக வளர்ச்சித் துறை, சிறப்பு முகாம் 4.0 மூலம் நிலுவையில் உள்ள மனுக்களை முழுமையாக முடித்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு பிரச்சாரம் 4.0 இன் முதல் 15 நாட்களில், தூய்மை இயக்கங்கள் மூலம் 100 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், மாநில அரசுகளின் குறிப்புகள், பிரதமர் அலுவலக குறிப்புகள் ,பொதுமக்கள் குறை தீர்ப்பு ஆகியவற்றில் துறை தீவிரமாக ஈடுபட்டு தீர்வு கண்டது.
களையெடுப்பதற்காக அடையாளம் காணப்பட்ட 1189 கோப்புகளில், அடையாளம் காணப்பட்ட 1189 கோப்புகள் அனைத்தும் இந்தக் காலகட்டத்தில் முடித்து வைக்கப்பட்டன. மின்னணுக் கழிவுகளை அகற்றுதல் மூலம் ரூ.6,94,250/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அறைகலன்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன்த்துறை வெளிப்புற தூய்மை முகாம்களை நடத்தியுள்ளது.
----
PKV/DL
(Release ID: 2065577)