நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

சர்வதேச மெத்தனால் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு நித்தி ஆயோக் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2024 5:19PM by PIB Chennai

நித்தி ஆயோக் அமைப்பு புதுதில்லியில் உள்ள மானெக்சா மையத்தில் 2024, அக்டோபர் 17-18 வரை இரண்டு நாள் சர்வதேச மெத்தனால் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை நடத்த உள்ளது. இது நித்தி ஆயோக் நடத்தும் மெத்தனால் பொருளாதார திட்டம் குறித்த இரண்டாவது பெரிய கருத்தரங்கு ஆகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு செப்டம்பரில்இது போன்ற கருத்தரங்கம் நடத்தப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிற்கு தற்போது இரண்டாவது கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

மெத்தனால் உற்பத்தி, பயன்பாடு மற்றும் இத்தொழில் சார்ந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ஆராய்ச்சி முன்முயற்சிகள் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. அமெரிக்காவின் மெத்தனால் நிறுவனத்தை அறிவு சார் பங்குதாரராகக் கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின்  முன்னணி தொழில் நிறுவனங்களான கிர்லோஸ்கர், அசோக் லேலண்டு, வோல்வோ பெண்டா, எஃப்சி டெக் எனர்ஜி, வெஸ்மேன் தெர்மல், மெட்பியூயெல், தெர்மாக்ஸ், பிஎச்இஎல், என்டிபிசி மற்றும் என்எம்ஆர்எல்  ஆய்வகம் போன்ற இந்திய நிறுவனங்கள் உருவாக்கியுள்ள 100% மெத்தனாலில் இயங்கும் பேருந்துகள், டிரக்குகள், இலகுரக வர்த்தக வாகனங்கள், ஜெனரேட்டர்கள், பேட்டரி செல்கள், பாய்லர்கள், எரிவாயு டர்பைன்கள் போன்றவையும் கண்காட்சியில் இடம் பெற உள்ளன.

***

MM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2065515) வருகையாளர் எண்ணிக்கை : 108
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी