நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் சிறப்பு இயக்கம் 4.0 முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2024 3:48PM by PIB Chennai

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0-ல் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இது நாடு முழுவதும் உள்ள அதன் அனைத்து அலுவலகங்களிலும் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. 2024 அக்டோபர் 02 அன்று தொடங்கப்பட்டு 31 அக்டோபர் 2024 வரை இது நடைபெறுகிறது.

இந்த இயக்கம் பணியிடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தூய்மையை (ஸ்வச்சதா) நிறுவனமயமாக்க நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பதிவு மேலாண்மை, கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்தல், கழிவுப் பொருட்களை அகற்றி பணிப் பயன்பாட்டுக்கு அதிக இடத்தை உருவாக்குதல் போன்ற முக்கிய அம்சங்களும் இந்த இயக்கத்தில் அடங்கும்.

2024 அக்டோபர் 15 நிலவரப்படி, சிபிஐசி 75%-க்கும் மேற்பட்ட குறைகள் மேல்முறையீடுகளை வெற்றிகரமாக தீர்த்துள்ளது. 12,464 கோப்புகளை மதிப்பாய்வு செய்துள்ளது. 260 மின்-கோப்புகளை மூடியுள்ளது. அலுவலக இடங்கள், பொது இடங்களை இலக்காகக் கொண்டு பல்வேறு இடங்களில் சுமார் 289 தூய்மை இயக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

கழிவுப் பொருட்களை அகற்றியதன் விளைவாக 5,070 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டு ரூ.96,390 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

---

PLM/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2065471) வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी