பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 92 இணைக்கப்பட்ட/சார்நிலை அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் சுமார் 6500 பயனர்களை உள்ளடக்கிய மின்னணு அலுவலகங்கள் செயல்படுத்தப்படுகின்றன
Posted On:
14 OCT 2024 6:09PM by PIB Chennai
மிகவும் திறமையான, பயனுள்ள, வெளிப்படையான மற்றும் நிலையான அலுவலக நடைமுறைகளை கற்பிப்பதன் மூலம், அரசின் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்திய அரசால் செயல்படுத்தப்படும் மின்னணு அலுவலகம். நிருவாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG) மின்னணு அலுவலகத்தை செயல்படுத்தும் ஒருங்கிணைப்புத் துறையாகும்.
2019-2024 ஆண்டுகளில், 37 லட்சம் கோப்புகளுடன் மத்திய செயலகத்தில் மின்னணு-அலுவலகத்தை ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க வேகத்தைப் பெற்றது, அதாவது, 94 சதவீதத்திற்கும் அதிகமான கோப்புகள் மற்றும் ரசீதுகள் மின்னணு -கோப்புகள் மற்றும் மின்னணு -ரசீதுகளாக மின்னணு முறையில் கையாளப்படுகின்றன. மத்திய செயலகத்தில் இ-அலுவலக தளம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதன் பின்னணியில், இணைக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் மின்னணு -அலுவலகத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் துணை அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள், அனைத்து அமைச்சகங்கள் / துறைகளுடன் கலந்தாலோசித்த பின்னர் மின்னணு அலுவலகத்தை செயல்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட, சார்நிலை அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இ-அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை 24 ஜூன் 2024 அன்று DARPG நோடல் துறையாக வெளியிட்டது. அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மின்னணு அலுவலகத்தை அமல்படுத்துவதற்கான அறிவுசார் பங்குதாரரான தேசிய தகவல் மையம் ஆகியவற்றுடன் அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டங்களில் போர்டிங் பாதை மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகள் உறுதிப்படுத்தப்பட்டன.
மத்திய நிர்வாக சீர்திருத்தத்துறை மற்றும் தேசிய தகவல் மையம் ஆகியவற்றின் தொடர் முயற்சிகளின் விளைவாக, 92 இணைக்கப்பட்ட/சார்நிலை அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் சுமார் 6500 பயனர்களுக்கு மின்னணு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. அரசின் 100 நாள் செயல் திட்டத்தின் கீழ் 92 அலுவலகங்களில் இ-அலுவலகம் செயல்படுத்தப்பட்டுள்ளது
மீதமுள்ள 41 இணைக்கப்பட்ட / சார்நிலை அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்புகளிலும், மின்னணு அலுவலகத்தை வெளியிடுவதற்கான செயல்முறை மேம்பட்ட கட்டத்தில் உள்ளது.
***
MM/AG/DL
(Release ID: 2064801)
Visitor Counter : 58