பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இந்தியாவில் உயிரி சூழலில் எரிபொருள்கள் மாற்றத்திற்கு அரசின் ஆதரவு - பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி
Posted On:
14 OCT 2024 5:13PM by PIB Chennai
சிஐஐ உயிரி எரிசக்தி உச்சி மாநாட்டின் 12-வது பதிப்பில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, உயிரி எரிசக்தியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை சுட்டிக் காட்டினார். இந்தியாவின் எத்தனால் கலப்பு முயற்சியின் வெற்றியை திரு பூரி எடுத்துரைத்தார். 2014-ல் 1.53 சதவீதமாக இருந்த எத்தனால் கலப்பு சதவீதம், 2024-ல் 15 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளால் ஊக்குவிக்கப்பட்டு, அரசு 2025-ம் ஆண்டிற்கு 20% கலப்புக்கான இலக்கை முன்னெடுத்துள்ளது. இது நிலையான எரிசக்திக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. 20% கலப்பு இலக்கை அடைந்த பின்னர், எதிர்காலத்திற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான விவாதங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2014 முதல் இந்தியாவின் உயிரி எரிபொருள் சூழல் அமைப்பை மாற்றியமைப்பதில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையை திரு. ஹர்தீப் சிங் பூரி பாராட்டினார்.
2014 முதல் ஆகஸ்ட் 2024 வரை 1,06,072 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி சேமிப்பை ஈட்டியுள்ளதாகவும், கரியமில வாயு வெளியேற்றத்தை 544 லட்சம் மெட்ரிக் டன் குறைத்துள்ளதாகவும், எத்தனால் திட்டத்தின் குறிப்பிடத்தக்க விளைவுகளை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிட்டார். அடுத்த இருபது ஆண்டுகளில் உலகளாவிய எரிசக்தி தேவையில் 25% அதிகரிக்கும் என்று கணித்துள்ளார். பருவநிலை இலக்குகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும்போது இந்த தேவையை பூர்த்தி செய்வதில் உயிரி எரிசக்தி முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். தற்போது 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (வுட் மெக்கென்சியின் கூற்றுப்படி), உயிரி எரிசக்தி சந்தை 2050-ம் ஆண்டில் 125 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். உலகளாவிய நிகர பூஜ்ஜிய இலக்குகள் அடையப்பட்டால், இந்த எண்ணிக்கை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
எத்தனால் உற்பத்தியை ஆதரிப்பதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்திய பல்வேறு சலுகைகள் குறித்தும் அமைச்சர் குறிப்பிட்டார்.
***
IR/KPG/DL
(Release ID: 2064781)
Visitor Counter : 53