எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விசாகப்பட்டினம் ஆர்ஐஎன்எல் எஃகு ஆலையில் வரிப்பிடித்தம் குறித்த விளக்க நிகழ்வை வருமான வரித்துறை நடத்தியது

प्रविष्टि तिथि: 14 OCT 2024 5:11PM by PIB Chennai

விசாகப்பட்டினம் ஆர்ஐஎன்எல் எஃகு ஆலையில் வரிப்பிடித்தம் குறித்த விளக்க நிகழ்வை விசாகப்பட்டினம் வருமான வரிப்பிடித்த வட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடத்தியது

 

இந்நிகழ்ச்சிக்கு விசாகப்பட்டினம் வருமான வரிப்பிடித்த வட்ட இணை ஆணையர் திரு கே பிரசாத் தலைமை தாங்கினார். அப்போது ஆர்ஐஎன்எல் உயர் அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு கே பிரசாத், வருமான வரிப்பிடித்தம் தொடர்பாக டிஜிட்டல் முறையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்து விளக்கினார்.  வருமான வரி செலுத்துவோர் வசதிக்காக எந்தவொரு வருமான வரி அலுவலகங்களுக்கும் செல்லாமல்  மேல்முறையீடுகளை பதிவு செய்தல், ஆண்டு தகவல் முறை மூலம் தரவுகளின் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்து அவர் விளக்கினார். விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் ஊழியர்களுக்கு வருமான வரிப்பிடித்தம் தொடர்பான விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.  வருமான வரி தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

------

 

IR/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2064736) आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी