பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படை பாய்மரப்படகு சாம்பியன்ஷிப் போட்டி – 2024

Posted On: 14 OCT 2024 11:22AM by PIB Chennai

இந்திய கடற்படையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் மிகப்பெரிய பாய்மரப் படகுப் போட்டி, எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் (ஐ.என்.ஏ) 2024 அக்டோபர் 16 முதல் அக்டோபர் 19 வரை நடைபெற உள்ளது.

நாட்டின் மிகச்சிறந்த பாய்மரப் படகுப் போட்டி வசதிகளைக் கொண்ட மையங்களில் ஒன்றான ஐ.என்.ஏ.வில் உள்ள மரக்கர் வாட்டர்மேன்ஷிப் பயிற்சி மையம், இந்திய கடற்படையின் 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு தயாராகி வருகிறது. அவர்கள் மூன்று வெவ்வேறு வடிவிலான போட்டிகளில் ஐந்து வெவ்வேறு வகை படகுகளில் தங்கள் படகு செலுத்தும் திறன்களை சோதிக்க உள்ளனர்.

இந்தப் போட்டியில் அதிகாரிகள், கேடட்கள் மற்றும் மாலுமிகள் (அக்னிவீரர்கள் உட்பட) அடங்கிய மூன்று கடற்படை கட்டளைகளின் குழுக்கள் பங்கேற்கின்றனர்.

பாய்மரப்படகின் நான்கு மிகவும் பிரபலமான நிலைகளில் போட்டி நடைபெறும். பெண்களுக்கான சர்வதேச லேசர் பிரிவு படகு, (ஐ.எல்.சி.ஏ-6), ஆண்களுக்கான ஐ.எல்.சி.ஏ-7 பிரிவு படகு மற்றும் விண்ட்சர்ஃபிங் பிக் பீச் பிரிவு படகு ஆகியவை இருக்கும். எண்டர்பிரைஸ் பிரிவு படகில் குழுப் போட்டி நடைபெறும்.

***

(Release ID: 2064575)

IR/KPG/KR



(Release ID: 2064612) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi , Gujarati