பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இராணுவ விவகாரங்கள் துறையின் சிறப்பு இயக்கம் 4.0

Posted On: 11 OCT 2024 5:50PM by PIB Chennai

2024, அக்டோபர் 02 முதல் 31 வரையிலான  சிறப்பு இயக்கம் 4.0-ன் அமலாக்க கட்டத்தின் முதல் வாரத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்கள் துறை 1,19,240 கோப்புகளை ஆய்வு செய்து, சுமார் 835 இயக்கத் தளங்களை சுத்தம் செய்து, கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.10,16,08 வருவாய் ஈட்டியுள்ளது. இந்த இயக்கத்தின் முன்னேற்றம் நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு, குறிக்கோள்கள் முழு உறுதியுடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சிறப்பு இயக்கம் 4.0 நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களில் மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொலைதூரப்  பகுதிகள், எல்லைப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள முப்படைகளின் பிரிவுகள் மற்றும் அமைப்புகளில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2024, செப்டம்பர் மாத ஆயத்தக் கட்டத்தின் போது இயக்கத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் இத்துறையால்  உறுதியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.

பொதுத் தூய்மை, சிறந்த இட மேலாண்மை, பழைய ஆவணங்களை அகற்றுதல், கிடைக்கும் இடத்தை அழகுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் பணியிடங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைப்பதில்  இந்த சிறப்பு இயக்கம் கவனம் செலுத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமர் அலுவலகம் மற்றும் மாநில அரசின் குறிப்புகள், மேல்முறையீடுகள் மற்றும் நாடாளுமன்ற உத்தரவாதங்கள் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள குறைகளைப் போக்குவது  இந்த இயக்கத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.

 

***

SMB/DL


(Release ID: 2064258) Visitor Counter : 37


Read this release in: English , Urdu , Hindi