இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு ஆளுகை வரைவு மசோதா 2024 மீது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன
Posted On:
10 OCT 2024 5:35PM by PIB Chennai
சட்டமாக்கப்படுவதற்கு முந்தைய ஆலோசனைகளைப் பெறும் நடைமுறையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகள் / ஆலோசனைகளை வரவேற்கும் வகையில் தேசிய விளையாட்டு ஆளுகை வரைவு மசோதா 2024-ஐ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பொது தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த மசோதாவின் நோக்கங்கள்
விளையாட்டு மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு, விளையாட்டு வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள், நல்லாட்சி நடைமுறைகள் மூலம் விளையாட்டில் நெறிமுறைகளை வழங்குதல்;
ஒலிம்பிக் மற்றும் விளையாட்டு இயக்கத்தின் நல்லாட்சி, நெறிமுறைகள் மற்றும் நியாயமான விளையாட்டு, ஒலிம்பிக் சாசனம், பாராலிம்பிக் சாசனம், சர்வதேச சிறந்த நடைமுறைகள் மற்றும் நிறுவப்பட்ட சட்ட தரங்கள் ஆகிய உலகளாவிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு கூட்டமைப்புகளின் நிர்வாகத்திற்கான திறன் மற்றும் விவேகமான தரங்களை நிறுவுதல்;
விளையாட்டு குறைகள் மற்றும் விளையாட்டு தாவாக்களை ஒருங்கிணைந்த, சமமான மற்றும் பயனுள்ள முறையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நிறுவுதல்
தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதுடன், பொறுப்பான மத்திய ஒழுங்குமுறை ஆணையமாக செயல்படும் இந்திய விளையாட்டு ஒழுங்குமுறை வாரியத்தை நிறுவுதல், சர்வதேச கொள்கைகளுக்கு ஏற்பவும், தேசிய நலனை கருத்தில் கொண்டும், ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல், விளையாட்டு கூட்டமைப்புகளின் நெறிமுறை ஆளுகைகளுக்கான கட்டாய விதிமுறைகளை அறிமுகப்படுத்துதல், அனைத்து தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளிலும் விளையாட்டு வீரர்கள் ஆணையங்களை உருவாக்குவதை கட்டாயப்படுத்துதல் , செயற் குழுக்களின் விளையாட்டு வீரர்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்தல், பாதுகாப்பான விளையாட்டு கொள்கையை அமல்படுத்துதல், விளையாட்டு தொடர்பான வழக்குகளுக்கு விரைவான எளிதான தீர்வை வழங்கும் மேல்முறையீட்டு விளையாட்டு தீர்ப்பாயத்தை அமைத்தல், உலகளாவிய ஊக்கமருந்து எதிர்ப்பு மற்றும் நெறிமுறை தரங்களுடன் இணங்குதல், பாலின பிரதிநிதித்துவத்தை ஊக்குவித்தல், சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த விளையாட்டு தேர்தல் குழுவை அமைத்தல், தேசிய பெயர் மற்றும் சின்னங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்தல், மீறினால் ஓராண்டு அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்தல் ஆகியவை இந்த வரைவு மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.
பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சகத்திற்கு ஆலோசனைகள் / கருத்துக்களை மின்னஞ்சல் முகவரி (draft.sportsbill[at]gov[dot]in) மூலம் 25.10.2024 க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
வரைவு தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2024 ஐ https://yas.nic.in/sports/draft-national-sports-governance-bill-2024-inviting-comments-suggestions-general-public-and -ல் அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063882
***
PKV/AG/DL
(Release ID: 2063968)
Visitor Counter : 46