இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
நாட்டின் கலாச்சாரத் தூதர்களாக மாறுங்கள்: மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் வலியுறுத்தல்
Posted On:
10 OCT 2024 4:30PM by PIB Chennai
இளைஞர்கள் நாட்டின் கலாச்சாரத் தூதர்களாக மாற வேண்டும் என்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் வலியுறுத்தியுள்ளார். நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டீல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற
வளர்ச்சியடைந்த பாரதத்தின் தூதர்களாக இளைஞர்களை இணைக்கும் நிகழ்ச்சியில் திரு ஷெகாவத் பேசினார். அதிக எண்ணிக்கையிலான உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று திரு ஷெகாவத் கூறினார். இது தொடர்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர் சமுதாயம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் இளைஞர்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குபவர்களாக இருப்பார்கள் என்றும், எதிர்காலத்தில், வளர்ந்த இந்தியாவில் வாழும் மக்கள் இன்றைய இளைஞர்களுக்கு அதன் பெருமையை வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார். காலனி ஆதிக்க ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவை விடுதலை பெறச் செய்வதற்காக தங்களையே தியாகம் செய்த நாட்டின் மதிப்பிற்குரிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றுமாறு அவர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்தை கொண்டு வரும் நோக்கத்துடன் தேச நிர்மாணத்திற்கு பங்களிக்க இதுவே நேரமும் வாய்ப்பும் என்று மத்திய அமைச்சர் கூறினார், இது நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டுகளில் 'சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்' என்ற உத்தியைக் கடைப்பிடித்தது. இது ஏராளமான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று திரு ஷெகாவத் கூறினார். இந்த உத்தி வங்கிச் சேவை பெறாதவர்களுக்கு வங்கிச் சேவை வழங்குவதுடன், விவசாய விளைபொருட்களுக்கு ஒரே நாடு ஒரே சந்தையை வழங்குதல், காப்பீடு இல்லாதவர்களுக்கு காப்பீடு செய்தல் ஆகியவற்றிற்கான முயற்சிகளுக்கு வழிவகுத்தது. கடந்த 10 ஆண்டுகளில், உள்கட்டமைப்பில் பெரிய அளவில் வளர்ச்சி மற்றும் மாற்றத்தை நாடு கண்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது பல நாடுகளுக்கு முன்னோடியாக மாறியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளித்ததன் பயனாக கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் நாட்டில் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இன்று இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், இளைஞர்கள் நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் பெருமளவில் பங்களித்துள்ளனர் என்றும் திரு ஷெகாவத் கூறினார்.
தன்னிறைவு அல்லது தற்சார்பு நிலைதான் முன்னோக்கி செல்லும் வழி என்று அமைச்சர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், பாதுகாப்பு உற்பத்தித் துறை போன்ற பல துறைகளில் 'தற்சார்பு இந்தியா' உந்துதல் உணரப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். தேஜஸ் விமானங்கள் பல நாடுகளால் மிகவும் விரும்பப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். வேகமான மற்றும் அளவான வளர்ச்சி, ஊழலை சகித்துக்கொள்ளாத தன்மை, நாட்டின் பாரம்பரிய மாண்புகள் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் வெற்றிக் கதை தொடர்வதாக திரு ஷெகாவத் கூறினார்.
கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த நிகழ்ச்சியில் சாதனையாளர்களுடன் கலந்துரையாடினார். டி ஒய் பாட்டீல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் தலைவர் டாக்டர் விஜய் டி.பாட்டீல், பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தரும், துணைத் தலைவருமான டாக்டர் ஷிவானி வி பாட்டீல், துணைவேந்தர் திருமதி வந்தனா மிஸ்ரா, நேரு யுவ கேந்திரா சங்க இயக்குநர் (மகாராஷ்டிரா மற்றும் கோவா) திரு பிரகாஷ் குமார் மானூர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
PKV/AG/DL
(Release ID: 2063926)
Visitor Counter : 56