அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்டில் உள்ள தெற்கு கரன்புராவின் கிழக்குப் பகுதி நிலக்கரி சுரங்கத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஷேல் (மக்கிய பொருள்) எரிவாயு உற்பத்தியாகும் திறனை ஆய்வுகள் காட்டுகின்றன

Posted On: 10 OCT 2024 9:41AM by PIB Chennai

நுண்ணிய பாலினோமார்ஃப்கள்--, கரிம எச்சங்களின் படிவுகள், புவி வேதியியல் மதிப்பீடுகளுடன் இணைந்து, ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தில் தெற்கு கரன்புரா நிலக்கரி வயலின் கிழக்குப் பகுதியில் ஹைட்ரோகார்பன் உற்பத்திக்கான குறிப்பிடத்தக்க திறனைக் காட்டுகிறது. வடக்கில் உள்ள கிட்டி நிலக்கரி சுரங்கத்துடன் ஒப்பிடும்போது இந்தப் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு சிர்கா நிலக்கரி சுரங்கம் ஹைட்ரோகார்பன் உற்பத்திக்கான அதிக திறனை வெளிப்படுத்தியுள்ளது.

28 பெரிய நிலக்கரி தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு கரன்புரா நிலக்கரி சுரங்கம், அதன் கணிசமான நிலக்கரி படிமங்களுக்கு நன்கு அறியப்பட்டுள்ளது. இந்தத் திறனை மதிப்பிடுவதற்கு, அறிவியல், தொழில்நுட்பத் துறையின்  தன்னாட்சி நிறுவனமான லக்னோவின் பீர்பால் சானி இன்ஸ்டிடியூட்  ஆஃப் பாலியோ சயின்சஸ் விஞ்ஞானிகள், மகரந்தம், வித்திகள் மற்றும் சில நுண்ணிய கரிமப் பொருட்கள் (பாலினோலஜிக்கல்) போன்றவற்றில் விரிவான ஆய்வை மேற்கொண்டனர்,

ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின் அர்கடா பகுதியின் சிர்கா நிலக்கரி சுரங்கம்  மற்றும் கிட்டி சி சுரங்கத்தில் புதிதாக வெளிப்படும் குவாரி முகப்புகளின் நிலக்கரி, கார்பனேசியஸ் ஷேல் மற்றும் மணற்கல் அடுக்குகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பேலினோபாசிஸ், ஹைட்ரோ கார்பன்கள் (எஸ் 1), கன ஹைட்ரோ கார்பன்கள் (எஸ் 2) பைரோலைசபிள் கார்பன் (பிசி), எஞ்சிய ஹைட்ரோகார்பன் (ஆர்.சி) போன்றவைபகுப்பாய்வு செய்யப்பட்டன.

ஜர்னல் ஆஃப் ஏசியன் எர்த் சயின்சஸ்-எக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, எதிர்கால ஆய்வு முயற்சிகளுக்கு வழிகாட்டும் அத்தியாவசிய நுண்ணறிவுகளை வழங்குகிறது, எரிசக்தி வள மேம்பாடு மற்றும் தேசிய எரிசக்தி பாதுகாப்புக்கு பங்களிக்கிறது. பொருளாதார ஆய்வை உறுதிப்படுத்த இன்னும் விரிவான ஆய்வு தேவை ப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063700

*****

SMB/KR


(Release ID: 2063738) Visitor Counter : 38


Read this release in: English , Urdu , Hindi