சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் ஆய்வு

Posted On: 09 OCT 2024 6:54PM by PIB Chennai

சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், இன்று (09.10.2024)  தில்லி உயிரியல் பூங்காவை ஆய்வு செய்தார். அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க யானையான சங்கரின் உடல்நலம் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்களுக்கான  வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், யானைப் பாகன்கள், கால்நடை மருத்துவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.  யானை சங்கரின் உடல்நிலையை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அமைச்சரின் இந்த ஆய்வின் போது, தில்லி தேசிய வன உயிரியல் பூங்காவை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது குறித்தும், நவீனப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் வனம் தொடர்பான கொள்கைகள் காரணமாக, இயற்கை, வனவிலங்குகளுடனான மக்களின் தொடர்பு அதிகரித்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் திரு சிங் தெரிவித்தார். அதே நேரத்தில், பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனஅவர் கூறினார்.

---

PLM/KPG/DL


(Release ID: 2063638) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi