பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், மின்னணு மற்றும் தகவல் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்முயற்சியை மேம்படுத்துவதற்கும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை அக்டோபர் 7-ம் தேதி இணைய பாதுகாப்பு பயிலரங்கிற்கு ஏற்பாடு
Posted On:
08 OCT 2024 12:21PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை (DARPG), புதுதில்லி, வினய் மார்க்கில் உள்ள குடிமைப்பணி அதிகாரிகள் பயிற்சி நிறுவனத்தில் (CSOI) இணைய பாதுகாப்பு குறித்த விரிவான பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) மூலம் இணைய தூய்மை மையத்தை நிறுவியதன் மூலம் இந்த முயற்சி ஈர்க்கப்பட்டது.
இந்தப் பயிலரங்கு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துதல், மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் பொது மின்-ஆளுமை தளங்களைப் பாதுகாக்க வலுவான இணைய உள்கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ், இந்தப் பயிலரங்கு நடைபெற்றது. இதில், தேசிய தகவல் மையத்தின் மூத்த அதிகாரிகள், பொதுமக்கள் குறைகளை மையப்படுத்திய பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்புக்கான நோடல் அதிகாரிகள் (CPGRAMS), தேசிய மின்-ஆளுமை சேவை வழங்கல் மதிப்பீடு (NeSDA) 2023-க்கான நோடல் அதிகாரிகள் மற்றும் அமைச்சகத்தின் டிஜிட்டல் தளங்களை உருவாக்குதல் மற்றும் இயக்குவதில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளின் பங்கேற்புடன் நடந்தது.
இந்தியாவில் தற்போதைய இணைய பாதுகாப்பு நிலவரம், பல்வேறு அரசு பயன்பாடுகளுக்கான இணைய பாதுகாப்பு பரிசீலனைகள், இன்றைய டிஜிட்டல் சூழலில் இணைய பாதுகாப்பின் முக்கியமான தேவை மற்றும் இணைய அச்சுறுத்தல்களைத் தணிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதில், இந்த பயிலரங்கு கவனம் செலுத்தியது.
இன்றைய டிஜிட்டல் சூழலில் வலுவான இணைய உள்கட்டமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்த அழுத்தமான செய்தியைத் தெரிவித்த நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வுத் துறையின் கூடுதல் செயலாளர் திரு புனீத் யாதவின் வரவேற்புரையுடன் தொடக்க அமர்வு தொடங்கியது. பொதுச் சேவைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய பாதுகாப்பான மற்றும் திறமையான மின்-ஆளுமை தளங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன் பேசுகையில், இணைய தூய்மை மையம்+ (போட்நெட் தூய்மை மற்றும் தீம்பொருள் பகுப்பாய்வு மையம்) போன்ற முன்முயற்சிகள் மூலம், இந்தியாவின் இணைய பாதுகாப்பு நிலைமையை வலுப்படுத்துவதில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை சுட்டிக் காட்டினார். இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு தலைமையிலான இந்த முயற்சிகள், நாட்டின் பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்தை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.
----
(Release ID 2063080)
MM/KPG/KR
(Release ID: 2063093)
Visitor Counter : 46