தேசிய மனித உரிமைகள் ஆணையம்
அதிகாரிகளுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி: தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது
Posted On:
08 OCT 2024 12:18PM by PIB Chennai
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2024 அக்டோபர் 3 முதல் 4-ந் தேதி வரை கோயம்புத்தூரில் தமிழ்நாடு, கர்நாடக ஆகிய மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது. தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடக்க, நிறைவு அமர்வுகளை தவிர, இந்த நிகழ்ச்சியில் மனித உரிமைகள், காவல்துறையின் பல்வேறு அம்சங்கள் குறித்த ஏழு தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன. இதில் சுமார் 45 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு அஜய் பட்நாகர், இந்த பயிற்சி முகாமை 2024 அக்டோபர் 03 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரு சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இரண்டாவது அமர்வில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி திரு வி.கண்ணதாசன் 'மனித உரிமைகளும் அதில் காவல்துறை அதிகாரிகளின் பங்கும்' என்பது குறித்து பேசினார்.
.
இரண்டாவது நாளில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் திரு பாரத் லால் முதல் அமர்வில் 'மனித உரிமைகள் கட்டமைப்பின் பரிணாமம்' குறித்து பேசினார்.
மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் குறித்த அமர்வும் இரண்டாவது நாளில் நடைபெற்றது.
***
(Release ID: 2063075)
PLM/RR/KR
(Release ID: 2063087)
Visitor Counter : 59