சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அரிசி ஆலை உரிமையாளர்கள், செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தியாளர்களின் கூட்டத்தை எப்எஸ்எஸ்ஏஐ நடத்தியது
प्रविष्टि तिथि:
07 OCT 2024 6:38PM by PIB Chennai
இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் ஹைதராபாத்தில் இன்று செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தித் துறை, அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. எப்எஸ்எஸ்ஏஐ தலைமை செயல் அதிகாரி கமலா வர்த்தன ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு, நுகர்வோர் விவகாரத் துறைகளின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய, தலைமை செயல் அதிகாரி கமலா வர்த்தன ராவ், கடுமையான தரநிலைகளை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். செறிவூட்டல் செயல்பாட்டின் போது பின்பற்றப்பட வேண்டிய தேவையான இணக்க வழிமுறைகளையும் விளக்கினார்.
மக்களிடையே நிலவும் ரத்த சோகை போன்ற நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் செறிவூட்டல் திட்டம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. .
உணவுப் பாதுகாப்பு ஆணையர் திரு ஆர்.வி.கர்ணன் பேசுகையில், நல்ல உற்பத்தி நடைமுறைகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு திட்டங்கள், பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2062912
****
PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2062941)
आगंतुक पटल : 135