பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் படைவீரர் நலத்துறை 'நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0' தொடங்குகிறது

Posted On: 07 OCT 2024 5:24PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத்துறை (DESW) 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை 'நிலுவையில் உள்ள விஷயங்களை தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கம்' (SCDPM 4.0) -ன் கீழ், பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதுபல்வேறு மாவட்ட சைனிக் வாரியங்கள் போன்ற, தொலைதூர பொது இடைமுகம் கொண்ட, தொலைதூர அலுவலகங்கள் உட்பட, பல்வேறு இடங்களை அடையாளம் கண்டு, நாடு தழுவிய இயக்கத்தை இத்துறை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம், பன்முக மருந்தகங்கள் மற்றும் மண்டல மறுகுடியமர்வு அலுவலகங்கள். களையெடுக்கும் நோக்கத்திற்காக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டிய 250-க்கும் மேற்பட்ட கோப்புகளை அது அடையாளம் கண்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட முன்னாள் படைவீரர் சங்கங்களும் தூய்மைப் பேரணி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைக் குறைத்தல், கிராமப் பொதுப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம், பல்வேறு இடங்களில் தூய்மை இயக்கங்களை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களும் பிரச்சாரத்தின் போது கௌரவிக்கப்படுகிறார்கள்.

17.09.2024 அன்று முன்னாள் படைவீரர் நலத்துறை செயலாளர் டாக்டர் நிட்டன் சந்திரா, துறை அதிகாரிகளுடன் இணைந்த அனைத்து அலுவலகங்களின் தலைவர்களுக்கும் 'தூய்மை உறுதிமொழி' செய்து வைத்ததன் மூலம், இயக்கத்தின் ஆயத்த கட்டம் தொடங்கியதுஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும், தங்கள் அலுவலகங்களிலும், சமூகங்களிலும் கழிவுகளை சேகரிக்கப்படும் இடத்திலேயே தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.

சிறப்பு முகாம் 4.0, நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவைத்தல், தூய்மையை மேம்படுத்துதல், சிறந்த பதிவேடு மேலாண்மை, பணி திறனை மேம்படுத்துதல் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும். ஆவணங்கள் மற்றும் கோப்புகளை, உகந்த முறையில் பராமரிக்கவும், பயனற்ற ஆவணங்களை அகற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்துறையின் அன்றாட செயல்பாடுகளில் தூய்மையை ஒரு பழக்க வழக்கமாக நிறுவனமயமாக்க, இந்த இயக்கம் முயல்கிறது.

***

MM/AG/KR/DL


(Release ID: 2062926) Visitor Counter : 35


Read this release in: English , Urdu , Hindi