பாதுகாப்பு அமைச்சகம்
டிஃப்கனெக்ட் 4.0: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்
Posted On:
07 OCT 2024 5:54PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், டிஃப்கனெக்ட் 4.0 நிகழ்வை தில்லி கண்டோன்மெண்டில் உள்ள மானெக்ஷா மையத்தில் இன்று (07.10.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது ஐடெக்ஸ் சவால்களுடன், அதிதி இரண்டாவது பதிப்பையும், பாதுகாப்பு இந்தியா புத்தொழில் சவால்களின் 12 வது பதிப்பையும் அவர் தொடங்கிவைத்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் தொழில்நுட்பம், ராணுவ தகவல்தொடர்பு, ராணுவ தளங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் போன்ற களங்களில் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து 19 சவால்களை அதிதி 2.0 கொண்டுள்ளது. இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்பு சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கியமான தொழில்நுட்ப பகுதிகளில் கவனம் செலுத்தி, பாதுகாப்பு உயர் சிறப்பு கண்டுபிடிப்புகளின் (iDEX) வெற்றியாளர்களுக்கு ரூ .25 கோடி வரை மானியத்தை வழங்குகிறது.
ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவி), செயற்கை நுண்ணறிவு, நெட்வொர்க்கிங் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப களங்களில் 41 சவால்களை டிஸ்க் 12 முன்வைக்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் தமது உரையில், நாட்டில் கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்க்கும் டிஃப்கனெக்ட் 4.0-வை பாராட்டினார். பாதுகாப்பு தொழில்துறை சூழலுக்கு இந்த தளம் புதிய சக்தியைக் கொண்டு வருவதாகவும், பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் நாட்டின் திறமைகளை ஒரு பங்குதாரராக வலுவாக மாற்றுகிறது என்றும் அவர் கூறினார். பாதுகாப்பு சூழல் அமைப்புடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் இடையிலான ஒரு முக்கியமான இணைப்பு டிஃப்கனெக்ட் என்று கூறிய அவர், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்ற கனவை நனவாக்க இந்த தளம் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஐடெக்ஸ் இதுவரை 9,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். ஐடெக்ஸ் திட்டத்தின் கீழ் 26 தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இதற்காக ரூ .1,000 கோடிக்கும் அதிகமான கொள்முதல் ஆர்டர்கள் பெறப்பபட்டுள்ளன என்று அவர் கூறினார்.
நாட்டில் புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், புத்தொழில் நிறுவனங்களின் துடிப்பான சூழலை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவின் இளைஞர்களின் வலிமையையும் திறமையையும் உலகம் அங்கீகரித்து வருவதாகக் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014-ல் ஆட்சிக்கு வந்தவுடன், தற்சார்பை அடைவதற்கு 'பாதுகாப்புத் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு இல்லாதது' ஒரு பெரிய தடையாக இருப்பதை அடையாளம் கண்டு, தேச நிர்மாணத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க பாடுபட்டது என்று திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.
போர்களில் புதிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்படுவது குறித்து பேசிய திரு ராஜ்நாத் சிங், வழக்கமான ஆயுதங்கள், வெடிமருந்துகளைத் தவிர, பல புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றார். இந்த தொழில்நுட்பங்கள் குறித்து ஆழமான புரிதல் தேவை என்று அழைப்பு விடுத்த அவர், தேசத்தின் பாதுகாப்பிற்காக இந்த முன்னேற்றங்களை ஊக்குவிக்குமாறு புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை திரு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.
ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், பாதுகாப்புத் துறை செயலாளர் திரு ஆர்.கே.சிங், பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலாளர் திரு சஞ்சீவ் குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி- மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், பாதுகாப்பு அமைச்சகத்தின் இதர மூத்த அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், இளம் தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2062888
***
PLM/RS/DL
(Release ID: 2062907)
Visitor Counter : 40