நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரிச் சட்டத்தை விரிவாக ஆய்வு செய்ய குழுவை அமைத்து, பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்கிறது

प्रविष्टि तिथि: 07 OCT 2024 5:14PM by PIB Chennai

மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024-25 மத்திய பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரிச் சட்டம்- 1961 பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்ள ஒரு துறை சார்ந்த குழுவை அமைத்துள்ளது. இந்தச் சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்துகொள்ள எளிதாகவும் இதன் மாற்றுவதே குறிக்கோள் ஆகும். இது சர்ச்சைகள், வழக்குகளைக் குறைப்பதுடன், வரி செலுத்துவோருக்கு அதிக வசதிகளை வழங்கும்.

இந்தக் குழு நான்கு பிரிவுகளில் பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளை வரவேற்கிறது:

  • மொழியை எளிமைப்படுத்துதல்
  • வழக்கு குறைப்பு
  • சிக்கல்கள் குறைப்பு,
  • தேவையற்ற/வழக்கற்றுப் போன விதிகள்

இதை எளிதாக்கும் வகையில், மின்னணு தாக்கல் இணைய தளத்தில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது, அதை பின்வரும் இணைப்பின் மூலம் அணுகலாம்:

https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/ita-comprehensive-review

இந்த இணைப்பில் 06.10.2024 முதல் பொதுமக்கள் தங்கள் பெயர், மொபைல் எண்ணை உள்ளிட்டு பக்கத்தை அணுகலாம். அதைத் தொடர்ந்து ஓடிபி வழியாக சரிபார்ப்பு செய்து உள்ளே செல்லலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2062861

***

PLM/RS/KR/DL


(रिलीज़ आईडी: 2062875) आगंतुक पटल : 147
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu