பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ தொடங்கியுள்ளது
Posted On:
04 OCT 2024 3:21PM by PIB Chennai
ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ், நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, நிலுவையில் உள்ள குறைகளைத் தீர்ப்பது, தூய்மையை நிறுவனமயமாக்குதல், உள் கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், பதிவேடுகள் நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு, இத்துறை இதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது
- 8,260 பொதுமக்கள் குறை தீர்க்கும் மனுக்கள், 831 மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 3976 இயற்பியல் கோப்புகள், 5,669 மின்னணு கோப்புகள் இந்த முகாமின் போது ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 3,976 கோப்புகளில், 1,263 கோப்புகள் தீர்ப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
- நாடு முழுவதும் 66 இடங்களில் தூய்மை இயக்கம் மேற்கொள்வது
- ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான 83 அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஓய்வூதியர்கள் நலத்துறை செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ், அலுவலக வளாகத்தை ஆய்வு செய்து, இந்த இயக்கம் செயல்படுத்தப்படும் காலத்தில் இலக்குகளை அடைய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.
---
PLM/KPG/KR/DL
(Release ID: 2062134)
Visitor Counter : 39