ஜவுளித்துறை அமைச்சகம்
கட்டுமான தளங்களில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்த, கயிறுகள், ஜியோடெக்ஸ்டைல்ஸ் மற்றும் இண்டெக் ஜவுளிகளுக்கான புதிய தரக் கட்டுப்பாட்டு ஆணை
Posted On:
04 OCT 2024 5:38PM by PIB Chennai
கட்டுமான தளங்களில் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், ஜவுளி அமைச்சகம், கயிறுகள், ஜியோடெக்ஸ்டைல்ஸ் மற்றும் தொழில்துறை ஜவுளிகளுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை (QCOs) வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி, இந்த அத்தியாவசிய பொருட்களுக்கான, கடுமையான தரங்களை நிர்ணயிப்பதோடு, கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கட்டுமான செயல்முறைகளின் செயல்திறனை உறுதி செய்யும்.
கட்டுமான தளங்கள், தனித்துவமான சவால்களை முன்வைக்கின்றன, அங்கு பாதுகாப்பு மற்றும் உற்பத்தித்திறனை உறுதி செய்வதற்கு சரியான பொருட்கள் முக்கியமானவை. பொருட்களை தூக்குவதற்கும், பாதுகாப்பதற்கும், கொண்டு செல்வதற்கும் கயிறுகள் இன்றியமையாதவை. அதே நேரத்தில், மண் உறுதிப்படுத்தல் மற்றும் அரிப்பு கட்டுப்பாட்டில், ஜியோடெக்ஸ்டைல்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாதுகாப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பு கவசங்களுக்கு இண்டுடெக் டெக்ஸ்டைல்ஸ் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது, இது, தொழிலாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துகிறது. இந்த QCOகளை செயல்படுத்துவது, இந்த தயாரிப்புகள் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான மிக உயர்ந்த தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்முயற்சி கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பயனளிக்கும் தரங்களை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கயிறுகள் மற்றும் ஜவுளிகளின் தரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம், கட்டுமானத் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். கட்டுமான தளத்தில் விபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறோம். தொழில்துறை முழுவதும் ஒரே மாதிரியான தர அளவீடுகளை அறிமுகப்படுத்துவது, நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை வழங்குவதுடன், கட்டுமான நிறுவனங்களுக்கான பொருள் தேர்வை எளிதாக்கும்.
QCO-கள் குறிப்பிட்ட காலக்கெடுவில் வெளியிடப்படும், இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) புதிய தரநிலைகளுக்கு இணங்க கூடுதல் நேரத்தை அனுமதிக்கும். QCO-கள் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும், SME-களுக்கு கூடுதல் 3 மாதங்கள். செயல்படுத்தப்பட்ட பிறகு, கயிறுகள், ஜியோடெக்ஸ்டைல்ஸ் மற்றும் தொழில்துறை ஜவுளிகளின் அனைத்து உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் குறிப்பிட்ட தரங்களை கடைப்பிடிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த தர வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, வழக்கமான ஆய்வுகள் மற்றும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
***
MM/AG/DL
(Release ID: 2062109)
Visitor Counter : 30