நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தூய்மை இந்தியா இயக்கத்தை சிபிஐசி அர்ப்பணிப்புடன் கடைபிடிக்கிறது

Posted On: 04 OCT 2024 5:04PM by PIB Chennai

மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியமான சிபிஐசி தூய்மை இந்தியா இயக்கத்தின் 10-வது ஆண்டு நிறைவை மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் 2024 அக்டோபர் 02 அன்று கொண்டாடியது.

கடந்த பத்து ஆண்டுகள் பணியின் குறிப்பிடத்தக்க சாதனைகளை முன்னிலைப்படுத்த நாடு முழுவதும் ஏராளமான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

சிபிஐசியின் தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், தில்லியின் திரிலோக்புரியில் உள்ள கோட்லா கிராமத்தில் ஒரு பெரிய தூய்மை இயக்கத்தையும், மரக்கன்று நடும் இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். தேசப்பிதா மகாத்மா காந்திக்கு மரியாதை  செலுத்தும் வகையில் மூத்த அதிகாரிகளும் ஊழியர்களும் இதில் பங்கேற்று பணிகளில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரத்தில், 100 பள்ளி மாணவர்களுடன் 400 அதிகாரிகள்  விரிவான தூய்மை இயக்கத்தில் பங்கேற்றனர்.

அனைத்து அதிகாரிகள், ஊழியர்களிடையே தூய்மையையும் பொறுப்புணர்வையும் சிறப்பு இயக்கம் 4.0, அதிகரித்துள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக நிறைவு செய்வதையும் தூய்மை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

----

PLM/KPG/DL



(Release ID: 2062095) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi