அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

விபத்து ஏற்படக்கூடிய திருப்பங்களுக்கான சாலை பாதுகாப்பு சென்சாருக்கான அடித்தளத்தை புதுமையான பாலிமர் நானோ கலவை உருவாக்குகிறது

Posted On: 04 OCT 2024 3:48PM by PIB Chennai

அடிக்கடி விபத்துக்கள் நிகழும் அதிக ஆபத்தான திருப்புமுனைகளில் பொருத்தக்கூடிய, சாலை பாதுகாப்பு சென்சாரின் முன்மாதிரி, அழுத்தம் உணர்திறன் மற்றும் ஆற்றல் அறுவடை பண்புகளைக் கொண்ட புதிய பாலிமர் நானோ கலவையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் தொடர்ந்து சுயமாக இயங்கும் ஆற்றல் உருவாக்கம் மற்றும் அழுத்த உணர்திறன் சாதனங்களுக்கான புதிய இயந்திரங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். மேலும் அவற்றை, பல பயன்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். நெகிழ்வான, சிறிய, நீண்ட கால மற்றும் அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் ஆற்றல் அறுவடை, சாதனங்கள் இன்றைய செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் முக்கியப் பங்கு வகிக்க முடியும். பாலிமர்கள் மற்றும் நானோ துகள்கள் இன்றைய நெகிழ்வான மின்னணு அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் மென் பொருள் அறிவியல் மைய (சி..என்.எஸ்), ஆராய்ச்சியாளர்கள், அழுத்தம், உணர்திறன் மற்றும் ஆற்றல் அறுவடை பயன்பாடுகளுக்கான பாலிமர் நானோ கலவையை உருவாக்கி, சாலைப் பாதுகாப்பு சென்சாரின் முன்மாதிரியைக் கண்டுபிடிக்க அதைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த புதிய கலவை முன்மாதிரி நகரும் படிக்கட்டுகளில் பொருத்தப்படலாம் என்பதோடு, மோசமான அபாயகரமான திருப்புமுனைகளுக்கு 100 மீட்டர் முன்பு, சாலையில் அமைக்கப்படலாம். இதனால், எதிர்புறத்தில் இருந்து வரும் எந்த வாகனமும், திரையில் சிக்னலைப் பார்த்து எச்சரிக்கை செய்யப்படும். இது மின்னணு கேஜெட்டுகளை இயக்க சேமிக்கக்கூடிய ஆற்றலை உருவாக்கி மேலும் பயன்படுத்த உதவும்

புதுமையான பாலிமர் நானோ கலவை மூலம், முன்மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது, இது இடைநிலை உலோக டைசால்கோஜெனைடால் செய்யப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள், திரு அங்கூர் வர்மா, டாக்டர் அர்ஜுன் ஹரி மது, டாக்டர் சுபாஷ் செருமன்னில் கருமுதில் ஆகியோர், வனேடியம் டைசல்பைடை (வி.எஸ்2) மிக உயர்ந்த மேற்பரப்பு மின்னேற்றத்துடன் ஒருங்கிணைத்தனர். இது பாலிமர்களின் அழுத்தமின் பண்புகளை மேம்படுத்தும் திறன் கொண்டது. பாலிமர் நானோ கலப்பு படங்கள் இந்த நானோ துகள்களை, பல்வேறு செறிவுகளில், நன்கு அறியப்பட்ட பைசோஎலக்ட்ரிக் பாலிமர், பாலி (வினைலிடின் டைஃப்ளூரைடு) (பி.வி.டி.எஃப்) இல் ஒருங்கிணைப்பதன் மூலம் தயாரிக்கப்பட்டன.

மேலும், நானோ துகள்களின் மேற்பரப்பு மின்னூட்டம் பாலிமர் நானோ கலவையின் அழுத்தமின் பண்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை அவர்கள் ஆராய்ந்தனர்கூடுதலாக, சாலை பாதுகாப்பு சென்சார் மற்றும் ஸ்மார்ட் கதவின் ஆய்வக அளவிலான ஆர்ப்பாட்டம் நிறுவப்பட்டது, ஒரு முன்மாதிரி அழுத்த சென்சாராக இருந்தது.

PVDF-VS2 நானோ கலவைகள் நெகிழ்வான, நீண்ட கால ஆற்றல் உருவாக்கம் மற்றும் அழுத்தம் உணர்திறன் பயன்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பை வழங்கும் என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது. இந்த படைப்பு சமீபத்தில் ஜர்னல் ஆஃப் மெட்டீரியல் கெமிஸ்ட்ரி இல் வெளியிடப்பட்டதுடன் இந்திய காப்புரிமை விண்ணப்பமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

***

MM/AG/DL


(Release ID: 2062072) Visitor Counter : 39


Read this release in: English , Urdu , Hindi , Telugu