பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிஎஸ்ஆர் ஒருங்கிணைப்பு குறித்த தேசிய மாநாட்டை ஐஐசிஏ புதுதில்லியில் நடத்தியது

Posted On: 04 OCT 2024 4:51PM by PIB Chennai

இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனமான ஐஐசிஏ (இந்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனம்) 2024 அக்டோபர் 02, 03 தேதிகளில் 'நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு செயல்பாடுகளை சீரமைப்பது குறித்த தேசிய மாநாடு, கண்காட்சியை' புது தில்லியில் நடத்தியது.

உலக வங்கியின் இந்திய இயக்குநர் டாக்டர் அகஸ்டே டானோ கௌமே இதனை தொடங்கி வைத்தார். ஐஐசிஏ டாக்டர் அஜய் பூஷண் பிரசாத் பாண்டே உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் இந்தியாவில் முதல் வருடாந்திர சிஎஸ்ஆர் தினத்தை நினைவுகூரும்வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, சிஎஸ்ஆர் முன்முயற்சிகளில் அறங்காவலர் தத்துவத்தை ஊக்குவிப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவும் சிஎஸ்ஆர்  பணிகளை சீரமைப்பை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 

டாக்டர் அஜய் பூஷண் பிரசாத் பாண்டே வரவேற்புரை நிகழ்த்தினார், அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை வடிவமைப்பதில் பெருநிறுவனங்களின்  முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார்.

து தலைமை உரையில், டாக்டர் அகஸ்டே டானோ கௌமே, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு மூலம் உலகளாவிய சவால்களை சமாளிப்பதற்கான இந்தியாவின் லட்சிய அணுகுமுறையைப் பாராட்டினார்.

*******

PLM/KPG/DL


(Release ID: 2062069) Visitor Counter : 36


Read this release in: English , Urdu , Hindi