சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தூய்மையே சேவை 2024 இயக்கத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை வெற்றிகரமாக நிறைவு செய்தது: இது மாற்றுத்திறனாளிகளுக்கு மேம்பட்ட வசதிகளை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடாகும்
प्रविष्टि तिथि:
04 OCT 2024 1:43PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையும் அதனுடன் இணைந்த தேசிய நிறுவனங்களும் தூய்மையே சேவை 2024 இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தன. திவ்ய கலா சக்தி, ஏடிஐபி முகாம்கள், சைகை மொழி தினம் மற்றும் இந்திய மறுவாழ்வு கல்வி வாரியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தூய்மை இருவார விழாவின் கீழ் இத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தூய்மை உறுதிமொழியை செய்துவைத்தார்.
டேராடூனில் உள்ள பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனத்தில் மத்திய இணையமைச்சர் திரு பி.எல். வர்மா தூய்மையே சேவை நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' நடும் இயக்கத்தில் பங்கேற்ற அவர், பார்வையற்ற மாணவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட ' எளிதில் அணுகக்கூடிய நூலகத்தை' திறந்து வைத்தார்.
இதேபோல், அறிவுத்திறன் குறைபாடுள்ள நபர்களுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனத்தில் , தூய்மை இயக்கத்தின் நிறைவு நிகழ்வில், சுகாதாரத்தை பராமரிப்பதற்கும் தங்கள் சமூகத்தில் தூய்மையை மேம்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை அதிகாரிகளும் ஊழியர்களும் மீண்டும் வெளிப்படுத்தினர்.
குவாலியரில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மாற்றுத்திறனாளி விளையாட்டு பயிற்சி மையம் அதன் அமைப்பு தினத்தை சுகாதார விழிப்புணர்வு பேரணியுடன் கொண்டாடியது. இந்தப் பேரணியில் 150 சக்கர நாற்காலி விளையாட்டு வீரர்கள், தேசிய மேலாளர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் குவாலியர் மாநகராட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்றனர். இது தூய்மையின் முக்கியத்துவம் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
பதினைந்து நாட்கள் நடைபெற்ற இந்த இயக்கத்தில், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், எளிதில் அணுகக்கூடிய கழிப்பறைகளைக் கட்டுதல், திறந்து வைத்தல் ஆகியவை குறித்து சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. துப்புரவு தொழிலாளர்களின் நலனை உறுதி செய்ய சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
***
(Release ID: 2061934)
SMB/RR/KR
(रिलीज़ आईडी: 2061971)
आगंतुक पटल : 88