வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய – அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் கருத்துக்களம்: வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் திருமதி ஜினா ரைமோண்டோ பங்கேற்பு
Posted On:
03 OCT 2024 5:59PM by PIB Chennai
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் திருமதி ஜினா ரைமோண்டோ ஆகியோர் கூட்டாக பங்கேற்ற இந்திய –அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் அமைப்புக் கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டனில் இன்று நடைபெற்றது.
இந்த அமைப்பு அரசுகளுக்கு இடையிலான வர்த்தக உரையாடலுடன் இணைந்து செயல்படுவதுடன், மற்ற உள்ளீடுகளையும் வழங்குகிறது.
நவம்பர் 2022-ல் இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகளால் மறுசீரமைக்கப்பட்டதிலிருந்து இந்த மன்றம் கூட்டப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
தொழில்முனைவு மற்றும் சிறு வணிகங்களை ஊக்குவித்தல், சுகாதாரம் மற்றும் மருந்துகள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, எரிசக்தி, நீர், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி, நிதி சேவைகள், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் போன்ற பல்வேறு முக்கிய துறைகளில் வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் ஏழு பணிக்குழுக்களின் கீழ் தலைமை நிர்வாக அதிகாரிகள் முன்னுரிமை அளித்தனர்.
மார்ச் 2023-ல் மன்றத்தின் கடைசி கூட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
வர்த்தக மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல், நெகிழ்திறன் கொண்ட இருதரப்பு கூட்டாண்மையை வளர்ப்பது ஆகியவற்றில் அரசு பிரதிநிதிகள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்திய-அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தின் பரிந்துரையின்படி முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பாதை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் அமெரிக்க முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாக இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள சில புதிய தொழில் நகரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061595
***
LKS/RS/DL
(Release ID: 2061637)
Visitor Counter : 46