சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சட்டமன்றத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட தூய்மை உழைப்புதானம்
Posted On:
02 OCT 2024 7:17PM by PIB Chennai
மகாத்மா காந்தி ஜெயந்தியைக் கொண்டாடவும், தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையிலும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டமன்றத் துறையால் தூய்மை உழைப்புதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது கூடுதல் செயலாளர் திரு உதய குமாரா தலைமையில், திரு. ஆர்.கே. பட்நாயக், இணைச் செயலாளர் / ஒருங்கிணைப்பு அதிகாரி, டாக்டர் கே.வி.குமார், இணைச் செயலாளர் , மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், துறை மற்றும் இணைக்கப்பட்ட அலுவலகங்களின் துப்புரவுத் தொழிலாளர்கள் பங்கேற்புடன் தூய்மையே சேவை இயக்கம்- 2024 மற்றும் சிறப்பு இயக்கம் 4.0 ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பெரிய முயற்சியாகும்.
திரு உதய குமாரா, திரு ஆர்.கே.பட்யாக் ஆகியோர் அனைத்து பிரிவுகள், தாழ்வாரங்கள், கழிப்பறைகள் போன்றவற்றை பார்வையிட்டு, இந்த இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தூய்மை நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு உதய குமாரா, இந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அனைத்து அதிகாரிகளும் தங்கள் சுற்றுப்புறங்களில் தூய்மையைப் பராமரிக்க சிறிது நேரம் பங்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரை இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்க ஊக்கப்படுத்தினார்.
---
SMB/DL
(Release ID: 2061248)
Visitor Counter : 53