சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஹரியானா மற்றும் பஞ்சாபில் நெல் பயிர்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்களை கண்காணிக்க சி.ஏ.க்யூ.எம் பறக்கும் படைகளை நிறுத்தியது
Posted On:
01 OCT 2024 6:07PM by PIB Chennai
காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) வழிகாட்டுதல்களின் படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசால் வகுக்கப்பட்ட விரிவான செயல் திட்டங்கள், 2024 காரீஃப் பருவத்தில் வைக்கோல்களை எரிப்பதை நிறுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளன.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நெல் அறுவடைக் காலங்களில், நெல் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், முகமைகளின் நெருக்கமான ஒருங்கிணைப்புக்காகவும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பறக்கும் படைகள், 01.10.2024 முதல் 30.11.2024 வரை பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல் பயிர்க்கழிவுகளை எரிக்கும் நிகழ்வுகள் அதிகமாக உள்ள ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது போன்று ஈடுபடுத்தப்படும் பறக்கும் படைகள், மாவட்ட அளவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
பறக்கும் படைகள் நிறுத்தப்பட்டுள்ள பஞ்சாபின் பதினாறு (16) மாவட்டங்களில் அமிர்தசரஸ், பர்னாலா, பதிண்டா, ஃபரித்கோட், ஃபதேஹ்கர் சாஹிப், ஃபாசில்கா, ஃபிரோஸ்பூர், ஜலந்தர், கபுர்தலா, லூதியானா, மான்சா, மோகா, முக்த்சர், பாட்டியாலா, சங்ரூர் மற்றும் தர்ன் தரன் ஆகியவை அடங்கும். ஹரியானாவின் பத்து (10) மாவட்டங்களில் அம்பாலா, ஃபதேஹாபாத், ஹிசார், ஜிந்த், கைத்தல், கர்னால், குருஷேத்ரா, சிர்சா, சோனிபட் மற்றும் யமுனாநகர் மாவட்டங்களில் பறக்கும் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பறக்கும் படைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் கள நிலவரத்தை மதிப்பீடு செய்து, ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில், நெல் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட, தினசரி அடிப்படையில், ஆணையம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அளிக்கும்.
மேலும், நெல் அறுவடை பருவத்தில் மொஹாலி / சண்டிகரில் நெல் பயிர்க் கழிவுகள் மேலாண்மை பிரிவை சிஏக்யூஎம் விரைவில் அமைக்கும். இந்த இரு மாநிலங்களிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு பறக்கும் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
---
MM/KPG/DL
(Release ID: 2060865)
Visitor Counter : 46