பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ செவிலியர் சேவை அதன் 99 வது எழுச்சி தினத்தை கொண்டாடுகிறது
Posted On:
01 OCT 2024 5:32PM by PIB Chennai
ராணுவ செவிலியர் சேவை (MNS) தனது 99-வது எழுச்சி தினத்தை அக்டோபர் 1, 2024 அன்று புனிதத்துடனும் பெருமையுடனும் கொண்டாடியது. ராணுவ செவிலியர் சேவைகளின் கூடுதல் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா, தேசிய போர் நினைவிடத்தில் மூத்த எம்என்எஸ் (ராணுவ செவிலியர் பணி) அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் முன்னிலையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) எம்என்எஸ் அதிகாரிகள் உணவகத்தில், காலையில் பாரம்பரிய முறையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா, இந்திய வீரர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில், குறிப்பாக போர்கள், மோதல்கள் மற்றும் தேசிய அவசர நிலைகளின்போது இன்றியமையாத பங்கைக் கொண்ட சேவையின் தோழமை மற்றும் தொழில்முறை சிறப்புக்கு ஒரு சான்றாகும்.
ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தனது செய்தியில், மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் நோயாளிகளைப் பராமரிப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக, எம்என்எஸ் அதிகாரிகளைப் பாராட்டினார். ஆயுதப் படைகளின் மருத்துவ சேவைகளின் தூணாகத் திகழும் எம்என்எஸ் அதிகாரிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.
1926-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ராணுவ செவிலியர் சேவை, இந்திய ஆயுதப் படைகளின் வலுவான மற்றும் தவிர்க்க முடியாத பகுதியாக வளர்ந்துள்ளது. கடந்த 99 ஆண்டுகளில், இது மிகவும் திறமையான மற்றும் சிறப்பு வாய்ந்த கேடராக உருவெடுத்துள்ளது, இந்திய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளது. ராணுவ செவிலியர் சேவை அதன் நோக்கமான சுயத்திற்கு முன் சேவை மற்றும் 'புன்னகையுடன் சேவை' என்ற குறிக்கோளை தொடர்ந்து நிலைநிறுத்துகிறது, இது, சேவையில் உள்ள ஒவ்வொரு எம்என்எஸ் அதிகாரியிடமும் ஆழமாக எதிரொலிக்கிறது.
----
MM/KPG/DL
(Release ID: 2060858)
Visitor Counter : 29