சுற்றுலா அமைச்சகம்
"தூய்மை நாட்டின் அழகுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், நிலையான சுற்றுலாவை ஊக்குவிக்கிறது": மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
01 OCT 2024 6:13PM by PIB Chennai
தூய்மையே சேவையின் பதினைந்து நாள் கொண்டாட்டத்தின் முடிவில், தூய்மை இயக்கம் மற்றும் விழிப்புணர்வு திட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு மெகா நிகழ்வு சுற்றுலா அமைச்சகத்தால் அக்டோபர் 1, 2024 அன்று புதுதில்லி, பூசாவில் உள்ள ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், சுற்றுலா அமைச்சகம், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பயணம் மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் நிறுவனங்களின் மாணவர்கள் உட்பட பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினார். அமைச்சர் தமது உரையில், பொதுவாகவும், குறிப்பாக சுற்றுலாத் தலங்களிலும் தூய்மையாக பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"தூய்மை, சமத்துவ மேம்பாடு" என்ற மையக்கருத்தைக் கொண்ட தூய்மையே சேவை இயக்கத்தின் தாக்கம், நமது சுற்றுப்புறங்களின் தூய்மைக்கு அப்பாற்பட்டது என்று அவர் கூறினார். இது நமக்கு பொறுப்பு, ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நமது கூட்டுப் பங்கு குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. தூய்மை நாட்டின் அழகுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், நிலையான சுற்றுலாவை ஊக்குவித்து, எதிர்கால சந்ததியினர் நமது நாட்டின் அதிசயங்களை அவற்றின் முழு மகிமையுடன் அனுபவிக்க உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், துப்புரவுப் பணியாளர்களுக்கு அமைச்சர், கௌரவ தூய்மை பிரஹாரி பேட்ஜ் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் தூய்மையே சேவை கருப்பொருளின் அடிப்படையில் ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களின் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட தெரு நாடகமும் அடங்கும். அமைச்சர் தலைமையில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணி நடைபெற்றது. இந்த மெகா நிகழ்வில் சுமார் 500 பேர் பங்கேற்றனர்.
***
PKV/AG/DL
(रिलीज़ आईडी: 2060855)
आगंतुक पटल : 37