ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தூய்மையே சேவை 2024-ன் கீழ் தூய்மை மற்றும் தூய்மை மித்ராவின் நல்வாழ்வை ஜவுளி அமைச்சகம் ஊக்குவிக்கிறது

Posted On: 01 OCT 2024 6:05PM by PIB Chennai

ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகள் 'அலுவலக வளாகத்தை சுத்தம் செய்தல்', 'சானிடைசர்கள் மற்றும் முகக்கவசங்களை விநியோகித்தல்' மற்றும் துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு அமர்வுகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை நடத்தின.

தூய்மையே சேவை 2024 பிரச்சாரத்தின் கீழ், ஜவுளித்துறை செயலாளர் திருமதி ரச்னா ஷா அமைச்சகத்தின் முதல் மூன்று தூய்மையான பிரிவுகளை பாராட்டினார். இந்தச் சந்தர்ப்பத்தில், தூய்மையான மற்றும் திறமையான பணியிடத்தைப் பராமரிப்பதற்கான அர்ப்பணிப்பைத் தொடருமாறு அவர் அனைவரையும் ஊக்குவித்தார்.

மும்பையில் உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள ஜவுளிக் குழு, துப்புரவுப் பணியாளர்களுக்கு அவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த சோதனை, பொது உடல் பரிசோதனை உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தது.

"துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு அமர்வுகள்" என்ற கருப்பொருளுடன் தூய்மையே சேவை 2024-க்கான செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் துப்புரவு பணியாளர்கள் மத்தியில் சுகாதாரப் பிரச்சினைகளைத் தடுப்பதைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

30.09.2024 அன்று, தூய்மையே சேவையின் ஒரு பகுதியாக, இந்திய பருத்திக் கழக நிறுவனத்தில் முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் விநியோகம் செய்யப்பட்டது.

தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் தேசிய ஜவுளிக் கழகம் லிமிடெட் அதன் துப்புரவுப் பணியாளர்களுக்கு  முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்களை விநியோகித்தது.

தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக, "அதிகாரிகள் அலுவலகப் பிரிவுகளை ஆய்வு செய்து, தூய்மை பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தியுள்ளனர்".

இந்திய சணல் கழகத்தின் சார்பில், பள்ளியில் ஓவியப் போட்டி மற்றும் பரிசு வழங்குதல், தொட்டி / நீர்நிலை சுத்தம் செய்தல், மரம் நடுதல், தூய்மை இயக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பல இடங்களில் நடத்தப்பட்டன.

சணல் ஆணையர் அலுவலகம் பள்ளிகளில் 'கழிவிலிருந்து கலை' செயல்பாடுகளை ஏற்பாடு செய்து குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கியது.

***

PKV/AG/DL



(Release ID: 2060850) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi