பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கர்மயோகி இயக்கம் குறித்த திறன் மேம்பாட்டு பிரிவுகளுக்கான பயிலரங்கிற்கு இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தலைமை தாங்குகிறார்
Posted On:
01 OCT 2024 4:09PM by PIB Chennai
மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்குள், திறன் வளர்ப்பு அலகுகளின் பாத்திரங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பயிலரங்கிற்கு, 2024 அக்டோபர் 3-ம் தேதி தலைமை தாங்குவார். புதுதில்லி வினய் மார்க்கில் உள்ள சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) செயலாளர் விவேக் ஜோஷி, திறன் மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட குடிமைப் பணிகள் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டமான, மிஷன் கர்மயோகியின் முக்கிய செயல்பாட்டாளர்களாக மத்திய வங்கி கல்வி நிறுவனங்களின் பொறுப்புகள் குறித்த, பகிரப்பட்ட புரிதலை மேம்படுத்தும் வகையில், வரவிருக்கும் பயிலரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிஷன் கர்மயோகி, குடிமக்களை மையமாகக் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக உள்ள சிவில் சேவையை நிறுவ முயல்கிறது. திட்ட அமலாக்கத்தின் முதன்மை கவனம் உங்கள் அமைச்சகத்தை அறிந்து கொள்ளுங்கள் தொகுதிகளை உருவாக்குவதாகும் - அரசாங்க ஊழியர்கள் அந்தந்த நிறுவனங்களுடன் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள உதவும் சுருக்கமான ஆன்லைன் அறிமுக படிப்புகள் ஆகும்.
ஐஜிஓடி கர்மயோகி தளத்தில் வருடாந்திர திறன் மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து வெளியிடுவதற்கான பணிகளை, இந்தப் பயிலரங்கு மேற்கொள்ளும். ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் துறையிலும் அமைக்கப்பட்ட CBUகள், அனைத்து மத்திய அரசு ஊழியர்களையும் ஐஜிஓடி-ல் சேர்ப்பதை உறுதி செய்வது உட்பட, திறன் வளர்ப்பு முயற்சிகளை எளிதாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அக்டோபர் 3 அன்று, மிஷன் கர்மயோகியின் இலக்குகளுடன் சீரமைப்பை வலுப்படுத்தவும், திட்டத்தின் தலையீடுகள் பற்றிய ஆழமான புரிதலை உறுதி செய்யவும், சிபியூ-க்களின் தலைவர்களுடன் அமைச்சர் பேச்சு நடத்துவார்.
இந்தப் பயிலரங்கு, ஒத்துழைப்பை ஊக்குவிப்பதோடு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில், மிஷன் கர்மயோகியை தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான ஒரு நீடித்த நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
----
MM/KPG/KV/DL
(Release ID: 2060796)
Visitor Counter : 34