நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சிறப்பு முகாமின் ஆயத்த கட்டத்தில் கண்டறியப்பட்ட இலக்குகள் 4.0

Posted On: 01 OCT 2024 5:16PM by PIB Chennai

2024, செப்டம்பர் 16 முதல் 30 வரை நடைபெற்ற சிறப்பு இயக்கம்                4.0-ன் ஆயத்த கட்டத்தை, நிலக்கரி அமைச்சகம் வெற்றிகரமாக முடித்துள்ளது. தூய்மையை நிறுவனமயமாக்குவதிலும், அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள எண்ணிக்கையை குறைப்பதிலும், இந்த இயக்கம் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. சிறப்பு இயக்கம் 2024 அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அனைத்து அலுவலகங்களிலும், தூய்மையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது, இது ஒட்டுமொத்த தூய்மையை மேம்படுத்துவதையும், அரசு அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளும்போது, பொதுமக்களின் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த இயக்கத்திற்கு போதுமான தயாரிப்பை உறுதி செய்வதற்காக, நிலக்கரி அமைச்சகத்தால் ஆயத்த கட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க, வழக்கமான ஆய்வுக் கூட்டங்கள், செயலாளர் மற்றும் கூடுதல் செயலாளர் மட்டத்தில் நடத்தப்பட்டன. இந்த கடுமையான கண்காணிப்பு செயல்முறை, அனைத்து நடவடிக்கைகளும் இயக்கத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்தது. இது தூய்மை மற்றும் செயல்பாட்டு செயல்திறனின் உயர் தரத்தை பராமரிப்பதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

ஆயத்த கட்டத்தின் போது, பல முக்கிய நடவடிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன. இது இயக்கத்தின் இலக்குகளுக்கு அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.  ஆவண ஒழுங்கமைப்பை ஆய்வு செய்யவும், தேவையற்ற கோப்புகளைக் கண்டறிந்து ஆவண மேலாண்மையின் திறனை மேம்படுத்தவும், ஆவண அறையை முழுமையாக ஆய்வு செய்தனர். ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் அமைச்சகத்தின் அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், அலுவலக வளாகத்தில் இலவச சுகாதார பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் நிலைத்தன்மை முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிக்கும் வகையில், 2024, செப்டம்பர் 21  அன்று அமைச்சகம் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தை நடத்தியது.

இதற்கான ஆயத்தக் கட்டம் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், நிலுவையில் உள்ள எம்.பி.க்களின் குறிப்புகள், பிரதமர் அலுவலக குறிப்புகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் உள்ளிட்ட தனது இலக்குகளை அடைவதில், நிலக்கரி அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது. அரசு அலுவலகங்களின் ஒட்டுமொத்த தூய்மையில் அமைச்சகம் கவனம் செலுத்துகிறது. இட மேலாண்மைக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிப்பதுடன் கள அலுவலகங்களின் பணியிட அனுபவத்தை மேம்படுத்துகிறது.

தூய்மை நடவடிக்கைகளுக்காக மொத்தம் 964 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டு சிறப்பு இயக்கம்  3.0-ன் சாதனையை விட அதிகமாகும். மேலும், தோராயமாக 62,08,064 சதுர அடி இடம் சுத்தம் செய்யப்படும். மேலும் 8,286 மெட்ரிக் டன் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, கிடைக்கக்கூடிய இடத்தை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது. கோப்பு மேலாண்மை செயல்முறையின் ஒரு பகுதியாக, 19,091 கோப்புகள் மற்றும் 34,442 மின்-கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்படும், இது நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான டிஜிட்டல் பணியிடத்திற்கு பங்களிக்கும்.

ஆயத்த கட்டத்தை நிலக்கரி அமைச்சகம் நிறைவு செய்துள்ள நிலையில், சிறப்பு இயக்கம் 4.0-ஐ செயல்படுத்த தற்போது முழுமையாக தயாராக உள்ளது. தெளிவான குறிக்கோள்கள், வரையறுக்கப்பட்ட இலக்குகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள குழு ஆகியவற்றுடன், தூய்மை, செயல்பாட்டுத் திறன் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கு பதிலளிக்கும் தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்க அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

*** 

MM/KPG/DL



(Release ID: 2060787) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi