எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய மங்கனீஸ் தாது நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஏ.கே.சக்சேனா, கூடுதலாக ஆர்.ஐ.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்

Posted On: 30 SEP 2024 9:26PM by PIB Chennai

இந்திய மங்கனீஸ் தாது நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக  இயக்குநர் திரு ஏ.கே.சக்சேனா, கூடுதலாக விசாகப்பட்டினம் எஃகுத் தொழிற்சாலையின் கார்ப்பரேட் நிறுவனமான ஆர்.ஐ.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக  இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்

திரு ஏ.கே. சக்சேனா பொறுப்பேற்றவுடன், ஆர்.ஐ.என்.எல் இயக்குநர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் ஊது உலை 2-ஐ (கிருஷ்ணா) பார்வையிட்டு விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் ஊதுலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

பின்னர், ஆர்.ஐ.என்.எல் நிறுவனத்தின் முக்கிய உற்பத்திப் பிரிவுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய அவர், விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து விவாதித்தார்.

தொழிற்சாலை பார்வையிடலின்போது திரு ஏ.கே.பக்சி, இயக்குநர் (திட்டங்கள்), திரு எஸ்.சி.பாண்டே, இயக்குநர் (பணியாளர்), திரு சிஎச்.எஸ்.ஆர்.வி.ஜி.கே.கணேஷ், இயக்குநர் (நிதி), திரு ஜி.வி.என்.பிரசாத், இயக்குநர் (வணிகம்), சிஜிஎம் (பணிகள்) மற்றும்  மூத்த அதிகாரிகள் திரு சக்சேனாவுடன் சென்றனர்.

***

SMB/KV



(Release ID: 2060537) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi