வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தூய்மையே சேவை - 2024, ஐ.ஜி.ஓ.டி கர்மயோகியில் மின்-கற்றலுக்கு டிஜிட்டல்மயமாகிறது
Posted On:
30 SEP 2024 9:38PM by PIB Chennai
தற்போது நடைபெற்று வரும் தூய்மையே சேவை 2024 பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் செப்டம்பர் 30, 2024 அன்று ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி தளத்தில் தூய்மையே சேவை (எஸ்.ஹெச்.எஸ்) 2024 என்ற மின்-கற்றல் பயிற்சி தொகுதியை அறிமுகப்படுத்தியது. இந்தப் பயிற்சி மாநில, யூனியன் பிரதேச அதிகாரிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடிமக்களை நாடு முழுவதும் தூய்மை முயற்சிகளை மேம்படுத்தத் தேவையான அறிவு மற்றும் திறன்களை வளர்த்தெடுப்பதில் ஒரு முக்கிய நடவடிக்கையாகும் . வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார், திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர், செயலாளர் & தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிற உறுப்பினர்கள், ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி பாரத் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் தூய்மையே சேவை -2024 இயற்கையின் தூய்மை, கலாச்சாரத்தின் தூய்மை குறித்த பயிற்சி தொகுதியை வெளியிட்டார்.
பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார், "தூய்மைக்கான சமூக நடத்தை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கும், திறன் வளர்ப்பை மேம்படுத்துவதற்கும் இது ஒரு தளத்தை அமைக்கும் முயற்சியாகும்" என்றார்.
சமூக நடத்தை மாற்ற பிரச்சாரங்களில் திறன் வளர்ப்பைத் தூண்டுவதற்காக அமைச்சகம் மின்னணு தொகுதியை வெளியிட்டது. igotkarmayogi.gov.in இல் ஐ.ஜி.ஓ.டி இயங்குதளத்தில் ஹோஸ்ட் செய்யப்பட்ட இந்த ஊடாடும் பாடநெறி பல்வேறு தொகுதிகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எளிதான அணுகலை வழங்குகிறது, இது எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இந்த பாடத்திட்டத்தை முடித்தவுடன், பங்கேற்பாளர்கள் பயனுள்ள கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், சமூகத்தால் இயக்கப்படும் தூய்மை பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கும், அன்றாட வாழ்க்கையின் அடிப்படை அம்சமாக தூய்மையை ஒருங்கிணைப்பதற்கும் சிறந்த முறையில் தயார்படுத்தப்படுவார்கள்.
இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் துடிப்பான கள நடவடிக்கைகளின் போது தொடங்கப்பட்ட இந்த முன்முயற்சி, தூய்மை இலக்கு அலகுகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பெரிய அளவிலான தூய்மை இயக்கங்களுக்கு லட்சக்கணக்கான குடிமக்களை அணிதிரட்டுகிறது. நாடு முழுவதும், தூய்மையே சேவை 2024 இன் பதினைந்து நாட்களில் 14 கோடிக்கும் அதிகமான குடிமக்களை ஈடுபடுத்தும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
பயிற்சி தொகுதியில் சேர, பங்கேற்பாளர்கள் ஐ.ஜி.ஓ.டி உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி https://www.igotkarmayogi.gov.in/#/-ல் உள்நுழையலாம். மேலும் தகவலுக்கு குடிமக்கள் https://swachhatahiseva.gov.in/ என்ற வலைதளத்தை அணுகலாம்.
***
BR/KV
(Release ID: 2060529)
Visitor Counter : 30