தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அரசு நடத்தும் விடுதியின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் இறந்ததாக கூறப்படுவதை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்கிறது
Posted On:
30 SEP 2024 2:49PM by PIB Chennai
25 செப்டம்பர் 2024 அன்று மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் விடுதியின் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில், ஒரு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது, பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மின்சாரம் தாக்கி இறந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தானாக முன்வந்து அறிந்துள்ளது. 26.09.2024 அன்று வெளியான ஊடக தகவலின்படி, தொட்டியை சுத்தம் செய்யும் போது உள்ளே உள்ள தண்ணீர் பம்ப்புடன் இணைக்கப்பட்ட மின்சார கம்பியை மாணவர்கள் தொட்டுள்ளனர். பின்னர் அவர்கள் தண்ணீர் தொட்டியில் மிதப்பதைக் கண்ட கிராம மக்கள் விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்கள், உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையான கவலையை எழுப்புகின்றன என்று ஆணையம் தீர்மானித்துள்ளது. ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, விடுதி நிர்வாகத்தினர் இளம் மாணவர்களை இதுபோன்ற ஆபத்தான பணியைச் செய்யச் சொல்லி, பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாகத் தெரிகிறது, இதன் விளைவாக அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்தியப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போலீஸ் விசாரணையின் நிலை மற்றும் பாதிக்கப்பட்ட இருவரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு விவரம் ஆகியவை குறித்தும் இதில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
(Release ID: 2060250)
SRI/MM/AG/RR
(Release ID: 2060299)
Visitor Counter : 48