தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தொழிலாளர் சீர்திருத்தங்கள் குறித்த 5-வது பிராந்தியக் கூட்டம் -  லக்னோவில் நாளை மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தலைமையில் நடைபெறுகிறது

Posted On: 29 SEP 2024 6:41PM by PIB Chennai

 

தில்லி, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றின் மண்டல தொழிலாளர் நலத்துறைக் கூட்டம் லக்னோவில் நாளை (30.09.2024 -திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தொழிலாளர் சீர்திருத்தங்கள், இஷ்ரம்-தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் தரவுத்தளம், கட்டடம், இதர கட்டுமானத் தொழிலாளர்கள், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், வேலைவாய்ப்பை உருவாக்கும் முன்முயற்சிகள் போன்றவை குறித்து விவாதங்களை நடத்த மத்திய அரசின் தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நலன்- வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா, மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் -நிக்கோபார் தீவுகள் ஆகிய தென் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் முதல் மண்டல கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், லடாக், ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடனான 2- வது பிராந்திய கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. மகாராஷ்டிரா, கோவா, குஜராத், டாமன் - டையூ மற்றும் தாத்ரா - நகர் ஹவேலி, லட்சத்தீவு ஆகிய மேற்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடனான 3 வது பிராந்திய கூட்டம் குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்றது. ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய கிழக்கு மாநிலங்களுடனான 4-வது மண்டலக் கூட்டம்20.09.2024 அன்று புவனேஸ்வரில் நடைபெற்றது. இந்த மண்டல கூட்டங்கள் 04.10.2024 வரை தொடரும்.

தொழிலாளர் குறியீடுகளின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட வரைவு விதிகளில் ஒத்திசைவு, வேலைவாய்ப்பு தரவு சேகரிப்பு தொடர்பான பிரச்சினைகள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ளீடுகள், ஒரே இடத்தில் தீர்வாக -ஷ்ரம் தளத்தை நிறுவுதல் உள்ளிட்ட முக்கிய தொழிலாளர் நலன் சார்ந்த அம்சங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

*****

PLM/ KV

 

 



(Release ID: 2060149) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi