தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஏவிஜிசி-க்கான தேசிய உயர் சிறப்பு மையத்தால் ஏற்படும் நன்மைகள்
Posted On:
29 SEP 2024 11:27AM by PIB Chennai
ஏவிஜிசி துறை (AVGC -அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறை ஊடகம் - பொழுதுபோக்கு துறையின் எதிர்காலமாக விளங்குகிறது. மும்பையில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி (ஏவிஜிசி-எக்ஸ்ஆர்) ஆகியவற்றிற்கான தேசிய உயர் சிறப்பு மையத்தை (என்சிஓஇ) நிறுவ மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில் நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 8-ன் கீழ் நிறுவனமாக என்சிஓஇ அமைக்கப்படும். இந்திய வர்த்தக - தொழில் சபைகளின் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவை இந்திய அரசுடன் பங்குதாரர்களாக செயல்படும்.
திரைப்படங்கள், விஷுவல் எஃபெக்ட்ஸ் (விஎஃப்எக்ஸ்), கேமிங் அனிமேஷன் மற்றும் ஈர்க்கக்கூடிய மொபைல் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான தேவை அதிகரித்து வருவதால் இந்தியாவின் அனிமேஷன் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்கிறது. இந்த எழுச்சி திறமையான, ஆர்வமுள்ள அனிமேட்டர்களுக்கு அற்புதமான வாய்ப்புகளை வழங்குகிறது.
தேசிய சிறப்பு மையத்தின் சில முக்கிய நோக்கங்கள்:
*இந்திய அறிவுசார் சொத்துரிமையை உருவாக்குவதில் கவனம் செலுத்துதல்
*புதிய யுகத்தில் நமது கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துதல்
*தொழில்துறையில் ஒரு மேம்பட்ட விளைவை உருவாக்குதல்
*அரசு, கல்வியாளர்களுடன் இணைந்து தொழில்துறை தலைமையிலான முயற்சி
கல்வி, திறன் மேம்பாட்டுத் தொழில், மேம்பாடு, புதுமை ஆகியவற்றில் ஒருங்கிணைந்த கவனம் செலுத்துதல்
ஆர்.ஆர்.ஆர், பாகுபலி, தி லயன் கிங் , அவதார் போன்ற படங்கள் அனிமேஷன் மற்றும் அதிவேக தொழில்நுட்பத்தின் மகத்தான திறனை நிரூபித்துள்ளன! இந்தியாவின் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறை வேலைவாய்ப்பு, கண்டுபிடிப்புகளுக்கான பரந்த வாய்ப்புகளுடன் வேகமான வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153219&ModuleId=3®=3&lang=1
*****
PLM/ KV
(Release ID: 2060050)
Visitor Counter : 57