நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி அமைச்சகம் தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக மில்லேனியம் பூங்காவில் "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" நடும் இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது
प्रविष्टि तिथि:
21 SEP 2024 2:30PM by PIB Chennai
"தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" திட்டத்தின் கீழ் மில்லேனியம் பூங்காவில் மரக்கன்று நடும் இயக்கத்தை நிலக்கரி அமைச்சகம் இன்று மேற்கொண்டது. இந்த நிகழ்வு, தூய்மையான, பசுமையான சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்று வரும் தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
நிலக்கரி அமைச்சக செயலாளர் திரு வி.எல். காந்த ராவ் தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். நிலக்கரி அமைச்சக அதிகாரிகளின் ஆர்வமான பங்கேற்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்களின் கூட்டு அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது. இந்த ஈடுபாடு, சுரங்க நடவடிக்கைகளில் நிலையான நடைமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியது. நாட்டின் தூய்மையான, பசுமையான பணியை ஆதரிப்பதில் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் 10,942 ஹெக்டேர் நிலத்தில் 24 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு, பருவநிலை மாற்றத்தை எதிர்த்து, கார்பன் தடங்களைக் குறைப்பதில், எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை வளர்ப்பதில் இத்துறையினர் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
இன்றைய மரக்கன்றுகள் நடும் உந்துதல் ஆரோக்கியமான, தூய்மையான சூழலை அடைவதற்கு மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. இது தூய்மை இந்தியா பார்வையை மேலும் மேம்படுத்துகிறது.
*****
SMB/ KV
(रिलीज़ आईडी: 2059947)
आगंतुक पटल : 83