விவசாயத்துறை அமைச்சகம்
ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக விடுதி கட்டிடம் மற்றும் பயிற்சி வளாகத்திற்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்
Posted On:
28 SEP 2024 6:26PM by PIB Chennai
ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக விடுதி தொகுதி மற்றும் பயிற்சித் தொகுதிக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். விரைவில் ஹைதராபாத் வந்து அனைவருடனும் நேரடியாக ஆலோசனை நடத்துவேன் என்று சவுகான் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு சவுகான், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, அதே நேரத்தில் நமது உணவுப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பதே பிரதமரின் தீர்மானம் என்று கூறினார். 140 கோடி மக்களுக்கும் போதுமான உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கிடைக்க வேண்டும். நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். விவசாயம் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். ஒருபுறம் வாழ்வாதாரத்தையும், மறுபுறம் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வது நமது பொறுப்பு என்றார் அவர்.
பல திட்டங்களை செயல்படுத்துதல், ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் செயல்படுத்தும் பணி எங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார். நாம் விவசாயத்தை பன்முகப்படுத்த வேண்டும், மதிப்பு கூட்ட வேண்டும். அத்துடன், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும் ஒரு பணியாகும். ரசாயன உரங்களால் ஏற்படும் தீய விளைவுகள் உலகத்தின் முன் உள்ளன. மண்ணின் தரம் குறைந்து வருகிறது, மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். பயிற்சியில் இயற்கை விவசாயத்தையும் நாம் சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
விரிவாக்கப் பணியாளர்கள், வேளாண் விஞ்ஞானிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேலையில்லா இளைஞர்கள், இடுபொருள் விற்பனையாளர்கள் ஆகியோருக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம் என்று திரு சவுகான் மேலும் கூறினார். இங்கே வேலை வாய்ப்பு விகிதம் ஊக்கமளிக்கிறது. வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிப்பது இன்று மிகவும் முக்கியமானது. நமது அடிப்படை விரிவாக்கப் பணியின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் பயிற்சி தொகுதிகள் மற்றும் படிப்புகள் பாரம்பரியமாக மட்டுமல்லாமல், இன்றைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் ஏதேனும் ஆராய்ச்சி இருந்தால், பயிற்சி பாடத்திட்டத்தில் அதை மதிப்பிட்டு வரும் ஆண்டுகளில் தேவைப்படும் பயிற்சி குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேலும் கூறினார். பயிற்சிக்கான விரிவான மற்றும் முன்கூட்டிய திட்டமிடலையும் நாம் செய்ய வேண்டும். இந்த பிரமாண்டமான கட்டிடம் பசுமை கட்டிடம் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. ஆனால் கட்டிடம் என்பது உடல் மட்டுமே, ஆன்மா இந்த கட்டிடத்தில் செய்யப்படும் பயிற்சியாக இருக்கும். விவசாயத்தின் திசையையும், நிலையையும் பயிற்சி தீர்மானிக்கும். இதில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள் என அவர் கூறினார்.
இன்று ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் உள்ள டால்டன்கஞ்சில் தாம் இருப்பதாக திரு சவுகான் கூறினார். இங்கு துவரம் பருப்பு சாகுபடி செய்ய ஏற்ற பகுதி என்றும், நல்ல விலை கிடைக்காததால், துவரம் பருப்பு சாகுபடி குறைந்துள்ளது என்றும் அவரிடம் கூறப்பட்டது. இந்த நிலத்தில் துவரம் பருப்பு, பருப்பு வகைகள், பயறு வகைகள் சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், துவரம் பருப்பை முழுவதுமாக வாங்குவோம் என்று இன்று அறிவித்தேன். ஒரு குழு இங்கு வரலாம், உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது, சிறந்த விதைகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பேரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு பயிரிடப்படுவதாக நேற்று அவர் நேதர்ஹாட்டில் இருந்ததாக மத்திய அமைச்சர் மேலும் கூறினார். திரு சவுகான் தமது உரையில், இங்கு எவ்வாறு சிறந்த உற்பத்தியை மேற்கொள்ள முடியும், நல்ல தாவரங்களை எவ்வாறு கண்டறிய முடியும், சிறந்த விவசாய முறைகள் எவ்வாறு இருக்க முடியும் என்பது குறித்து பணியாற்ற முயற்சி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்..
*****
PKV/ KV
(Release ID: 2059887)
Visitor Counter : 32