சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலா, விருந்தோம்பல் துறைக்கு தொழில்துறை அந்தஸ்து வழங்குவது குறித்து மாநிலங்களுக்கு வழிகாட்டும் கையேடு – மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
27 SEP 2024 6:41PM by PIB Chennai
மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு தொழில்துறை அந்தஸ்தை வழங்குவதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான கையேட்டை இன்று (27.09.2024) வெளியிட்டுள்ளது.
வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், சுற்றுலாவில் தனியார் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுற்றுலாவை ஒரு தொழிலாக வகைப்படுத்தியுள்ளன.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு'தொழில் அந்தஸ்து' வழங்குவதிலும் செயல்படுத்துவதிலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக, மத்திய சுற்றுலா அமைச்சகம் ஒரு கையேட்டை வெளியிட்டுள்ளது, இது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கையேடு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுலாவுக்கு தொழில்துறை அந்தஸ்து வழங்குவதற்கான படிப்படியான வழிகாட்டுதலை வழங்குகிறது. இதன் மூலம் சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு மேலும் பலர் பயனடைவார்கள்.
---
PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2059658)
आगंतुक पटल : 57