வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திம்புவில் இந்தியா-பூடான் வர்த்தக செயலாளர்கள் நிலையிலான கூட்டம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 27 SEP 2024 6:45PM by PIB Chennai

திம்புவில் இன்று நடைபெற்ற இந்தியா - பூடான் வர்த்தக செயலாளர்கள் நிலையிலான கூட்டத்திற்கு மத்திய வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வாலும், பூடான் அரசின் வர்த்தகத் துறைச்  செயலாளர் திரு தாஷோ தாஷி வாங்மோ ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். ஜெய்காவ்ன் புன்ட்ஷோலிங்கில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பது,  கோக்ராஜர் கெலெபு மற்றும் பனார்ஹட் சமட்சே இடையே ரயில் இணைப்புகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் போது நடைபெற்ற முக்கிய விவாதங்கள்:

  • ஜெய்கான் புவன்ட்ஷோலிங்கில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைத்தல்
  • பூடானில் இருந்து இந்தியாவுக்கு பாக்கு இறக்குமதி செய்வது தொடர்பான நடைமுறைகள்
  • இந்தியா-பூடான் எல்லையில் எல்லைச் சந்தைகளை நிறுவுதல்;
  • வணிகர்களின் போக்குவரத்தை எளிதாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இருதரப்பு வர்த்தகம், வர்த்தகம், போக்குவரத்து, முதலீடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தரப்பினரும் மதிப்பீடு செய்தனர்.

***

PLM/KPG/DL


(रिलीज़ आईडी: 2059650) आगंतुक पटल : 69
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी