சுற்றுலா அமைச்சகம்
ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களுக்கும் முன்னணி விருந்தோம்பல் குழுக்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
प्रविष्टि तिथि:
27 SEP 2024 2:10PM by PIB Chennai
மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களுக்கும், 8 முன்னணி தேசிய, சர்வதேச விருந்தோம்பல் குழுக்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட், ஐஎச்ஜி ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ், மேரியட் இன்டர்நேஷனல், லலித் சூரி ஹாஸ்பிடாலிட்டி குழுமம், ஐடிசி குழும ஹோட்டல்கள், அபீஜே சுரேந்திரா பார்க் ஹோட்டல்ஸ், ரேடிசன் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ், மற்றும் லெமன் ட்ரீ ஹோட்டல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே, உலக சுற்றுலா தினமான இன்று (27.09.2024) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முன்னணி விருந்தோம்பல் தேசிய நிறுவனங்களின் தலைவர்கள், மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்திய விருந்தோம்பல், சுற்றுலா ஆகியவற்றின் தரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், சுற்றுலா அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள விருந்தோம்பல் குழுக்களிடமிருந்து தொழில்துறை பங்குதாரர்களாக மாற ஆர்வம் காட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளது. முதல் கட்டமாக 8 விருந்தோம்பல் குழுக்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-----
PLM/KPG/KR/DL
(रिलीज़ आईडी: 2059588)
आगंतुक पटल : 73