அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில், துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு முகாம் தூய்மையே சேவை -2024 இயக்கம் மற்றும் சிறப்பு இயக்கம் 4.0

Posted On: 26 SEP 2024 4:58PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தூய்மையே சேவை-2024 இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று, புதுதில்லியின் தொழில்நுட்ப பவனில் உள்ள ஆர்யபட்டா அரங்கில் தூய்மையே சேவை மற்றும் சிறப்பு இயக்கம் 4.0-க்கான தூய்மைப் பணியாளர் பாதுகாப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்தது. இணைச் செயலாளர் (நிர்வாகம்) மற்றும் மூத்த அதிகாரிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஹவுஸ்கீப்பிங் பணியாளர்களை பாராட்டினர்.

அலுவலக வளாகம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளை தூய்மையாக பராமரிக்க, துப்புரவுப் பணியாளர்கள் ஒருமனதாக பங்களித்துள்ளனர். தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ், இணைச் செயலாளர் திருமதி ஏ.தனலட்சுமி மற்றும் மூத்த அதிகாரிகள், அபாயகரமான மற்றும் ஆபத்தான பணிகளைச் செய்யும் போது, ஹவுஸ்கீப்பிங் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிர்ணயித்துள்ள இலக்குகளை அடைய இந்த இயக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

---

MM/KPG/KV/DL



(Release ID: 2059111) Visitor Counter : 16


Read this release in: English , Urdu