மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கோவாவில் சிஎல்எப்எம்ஏ-வின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் நேற்று தொடங்கி வைத்தார்
Posted On:
21 SEP 2024 12:05PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர், திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங், இந்தியாவின் கால்நடை தீவன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை கோவாவில் நேற்று தொடங்கி வைத்தார். சிஎல்எப்எம்ஏ ஆஃப் இந்தியாவின் தலைவர் திரு சுரேஷ் தியோரா, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு ஆணையர் டாக்டர். அபிஜித் மித்ரா மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் முன்னாள் இணைச் செயலர் திரு ஓ.பி. சௌத்ரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திரு ராஜீவ் ரஞ்சன் தமது உரையில், கால்நடை வளர்ப்பில் உள்நாட்டு தீர்வுகளை மேம்படுத்துவதற்கும் இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் மத்திய அரசின் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துரைத்தார். அமைப்புசாரா பால்வளத் துறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தீவனம் மற்றும் தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். சிஎல்எப்எம்ஏ வின் முன்முயற்சிகளைப் பாராட்டிய அவர், அத்தகைய விவாதங்கள் கொள்கை வகுப்பதில் அரசுக்கு உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திரு சுரேஷ் தியோரா, இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைத் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், இது விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்குகிறது என்று குறிப்பிட்டார். இந்தத் தொழில் ஆண்டுக்கு ரூ 12 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது, மேலும் முட்டை, இறைச்சி, பால் மற்றும் சீஸ் போன்ற உயர்தர கால்நடைப் பொருட்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டாக்டர் அபிஜித் மித்ரா, இந்தியாவின் கால்நடைத் துறைக்கு பயனளிக்க அரசாங்கம், தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், திரு ஓ.பி. சௌத்ரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
----
PKV/KV
(Release ID: 2059057)
Visitor Counter : 31