ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், இருமொழி இணைய தளமான 'பரிதி 24x25' -ஐ தொடங்கி வைத்தார்

Posted On: 25 SEP 2024 6:21PM by PIB Chennai

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மத்திய வெளியுறவு மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா முன்னிலையில், இந்தியாவுக்கான ஃபேஷன் டிரெண்ட் புத்தகமான "பரிதி 24x25" என்ற இருமொழி இணைய போர்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு வகை பிரித்தல் மின்-புத்தகம் ஆகியவற்றை 2024  செப்டம்பர் 5 அன்று அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் ஃபேஷன், ஜவுளி மற்றும் சில்லறை விற்பனையிலிருந்து 150-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள் மற்றும் பல்வேறு கைவினை தொகுப்புகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் பங்கேற்றனர். VisioNxt 60+ மைக்ரோ டிரெண்ட் அறிக்கைகள், 10+ க்ளோஸ்-டு-சீசன் போக்கு அறிக்கைகள், 3+ ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் இன்றுவரை இந்திய உடைகள் வகைகளின் முதல் செயற்கை நுண்ணறிவு வகைபிரித்தல் புத்தகம் ஆகியவற்றை தயாரித்துள்ளது.

ஃபேஷன் போக்குகளை முன்னறிவிக்கும் நாடுகளில் இந்தியாவை உலகளவில் நிலைநிறுத்தியுள்ளது, இந்திய பேஷன் சொற்களஞ்சியம் மற்றும் அடையாளத்தின் தெரிவுநிலையை அதிகரிக்கிறது, அதே நேரத்தில் சர்வதேச போக்கு நிறுவனங்களை சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. முன்கணிப்பு துறையில் இந்தியாவின் நுழைவு உலகளாவிய முன்கணிப்பு முகமைகளை சார்ந்திருப்பதைக் குறைக்கும், இந்திய பேஷன் நுகர்வோருக்கு தனித்துவமான நுண்ணறிவுகளை வழங்கும், தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வலிமையை ஜவுளியுடன் ஒருங்கிணைக்கும், மேலும் செயற்கை மற்றும் மனித நுண்ணறிவை ஒருங்கிணைக்கும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜியின் (என்ஐஎஃப்டி) பெகுசராய் விரிவாக்க மையத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். பங்கேற்பாளர்களுக்கு அடிப்படை தையல் மற்றும் ஆடை கட்டுமானத் திறன்களை வழங்குவதை மையமாகக் கொண்ட மூன்று நாள் பட்டறை தொடங்கி வைக்கப்பட்டது. அமைச்சர், மற்ற பிரமுகர்களுடன், மாதிரி உருவாக்கும் பிரிவு, ஆடை கட்டுமான ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட முக்கிய வசதிகளைப் பார்வையிட்டார், அங்கு அவர் பயிற்சி பங்கேற்பாளர்களுடன் உரையாடினார், மையத்தில் வழங்கப்படும் கற்றல் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்த அவர்களை ஊக்குவித்தார்.

கிரிராஜ் சிங் முன்னிலையில் என்.ஐ.எஃப்.டி மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் (என்.எஸ்.டி.சி) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைச்சர் தமது உரையில், என்.ஐ.எஃப்.டி பெகுசராய் மையம் நிறுவப்படுவதைக் குறிப்பிட்டார், இது நாட்டில் விளிம்புநிலை சமுதாயத்தின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நவநாகரிக தொழிற்துறையில் ஒரு முக்கிய அங்கமாக செயற்படும் கைவினை தலைமையிலான திறமையான தொழிலாளர் படையை கட்டியெழுப்புவதில் நிஃப்ட்டின் பங்கை அவர் வலியுறுத்தினார். ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கான தனது திட்டங்களையும், இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவதில் ஜவுளித் துறை எவ்வாறு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

பெகுசராய் விரிவாக்க மையம் தனது முதல் பட்டறையை 2024 செப்டம்பர் 17 முதல் 19 வரை வெற்றிகரமாக நிறைவு செய்தது, இதில் ஜீவிகா சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 31 பெண்களுக்கு ஆரம்பநிலைக்கான அடிப்படை வெட்டுதல் மற்றும் தையலுக்கான தீவிர பட்டறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. பட்டறை மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல புதிய முறைகள் மற்றும் வடிவமைப்புகளைக் கற்றுக்கொண்டனர்.

2017-ல் நடைபெற்ற உலகளாவிய ஜவுளி உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர், தொழில்துறை பங்குதாரர்களுக்கு இந்தியாவுக்கென பிரத்யேகமான நிகழ்நேர போக்கு நுண்ணறிவுகள் கிடைப்பதில் உள்ள இடைவெளியை அவர் எடுத்துரைத்தார். இதன் எதிரொலியாக, ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் விசியோஎன்க்ஸ்ட் என்ற போக்கு நுண்ணறிவு மற்றும் முன்கணிப்பு முயற்சி உருவாக்கப்பட்டு நிஃப்டில் நிறுவப்பட்டது. இந்த முயற்சி இந்திய ஃபேஷன் மற்றும் சில்லறை சந்தைக்கான போக்கு நுண்ணறிவு மற்றும் முன்னறிவிப்பை வழங்குவதில் கவனம் செலுத்தியது.

VisioNxt என்பது இந்தியாவின் முதல் முயற்சியாகும், இது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு (EI) ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஃபேஷன் போக்கு நுண்ணறிவு மற்றும் கணிப்புகளை உருவாக்குகிறது. இது இந்தியாவின் நேர்மறையான பன்முகத்தன்மை, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சமூக-பொருளாதார நுணுக்கங்களை பிரதிபலிக்கும் புவி-குறிப்பிட்ட போக்குகளை அடையாளம் கண்டு, வரைபடமாக்குகிறது மற்றும் பகுப்பாய்வு செய்கிறது, அதே நேரத்தில் நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், உள்நாட்டு வணிகங்கள், உள்நாட்டு வடிவமைப்பாளர்கள் மற்றும் பேஷன் பிராண்டுகளை ஆதரிப்பதற்கான விரிவான போக்குகள் மற்றும் நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்கிறது. இந்த அறிக்கை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் VisioNxt இருமொழி போர்டல் (www.visionxt.in) மூலம் கிடைக்கிறது.

***

PKV/RS/KV

 



(Release ID: 2058935) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi