சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தரப்படுத்தப்பட்ட தீர்வு செயல் திட்டத்திற்காக தலைநகர் தில்லிப் பிரதேசத்தில் காற்றின் தரம் குறித்து காற்றின் தர மேலாண்மை ஆணையத் துணைக்குழு ஆய்வு செய்துள்ளது
Posted On:
25 SEP 2024 6:27PM by PIB Chennai
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வழங்கிய மாலை 4 மணி ஏக்யூஐ செய்தி அறிக்கையின்படி, தில்லியின் தினசரி சராசரி காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) இன்று 235 ஆக இருந்தது. தற்போதைய காற்றின் தரநிலை, வானிலை மற்றும் காற்றின் தரக் குறியீடு ஆகியவற்றை தரப்படுத்தப்பட்ட தீர்வு செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக காற்றின் தர மேலாண்மை ஆணையத் துணைக் குழு ஆய்வு செய்தது. இந்தத் தகவல் இந்திய வானிலை ஆய்வுத்துறை / தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றில் கிடைக்கும்.
தில்லியின் சராசரி ஏ.க்யூ.ஐ ஏற்கனவே குறைந்து வரும் போக்கைக் காட்டத் தொடங்கியுள்ளது. ஏனெனில் இது மாலை 5 மணிக்கு 232 ஆக மேம்பட்டுள்ளது. காலப்போக்கில் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஎம்டி / ஐஐடிஎம்மின் முன்னறிவிப்பு இன்றும், வரவிருக்கும் சில நாட்களிலும் தில்லியில் லேசான மழை பெய்யும் என்பதைக் காட்டுகிறது. இதனால் தில்லியின் ஒட்டுமொத்த ஏ.க்யூ.ஐ 'மிதமான' பிரிவில் மேலும் மேம்பட வழிவகுக்கும்.
***
SMB/RS/DL
(Release ID: 2058779)
Visitor Counter : 23